எதிர்ப்புக்கு மத்தியில் தேவர் குரு பூஜை விழாவிற்கு செல்லும் எடப்பாடி.! உச்ச கட்ட பாதுகாப்பில் பசும்பொன்

பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என தேவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் பங்கேற்க , இன்று பசும்பொன் செல்வதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Security has been beefed up on the occasion of Pasumpon Thevar Guru Puja KAK

தேவர் குரு பூஜை விழா

ராமநாதபுரம் கமுதி அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமான், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் வருகை தரவுள்ளனர். இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எடப்பாடிக்கு எழுந்துள்ள எதிர்ப்புக்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.. 

Security has been beefed up on the occasion of Pasumpon Thevar Guru Puja KAK

அதிமுகவும் முக்குலத்தோரும்

அதிமுக தொடங்கிய காலம் தொட்டே அக்கட்சியின் முக்கிய வாக்கு வங்கியாக முக்குலத்தோர் சமுதாயம் இருந்து வருகிறது. கட்சி தொடங்கப்பட்டு சந்தித்த முதல் தேர்தலிலேயே எம்.ஜி.ஆரால் நிறுத்தப்பட்ட வேட்பாளரான மாயத்தேவர் முக்குலத்தோர் சமுதாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆரை தொடர்ந்து ஜெயலலிதாவும் முக்குலத்தோர் வாக்கு வங்கியை தக்கவைக்க அந்த சமுதாயத்திற்கு கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுத்தார்.  அதன் வரிசையில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு13 கிலோ எடையில் தங்கக்கவசம் வழங்கிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆண்டு தோறும் தவறாமல், குருபூஜைக்கும் அவர் சென்று வந்தார்.

Security has been beefed up on the occasion of Pasumpon Thevar Guru Puja KAK

தங்க கவசம் யாருக்கு உரிமை

ஜெயலலிதா மறைந்த பிறகு 2017 ல் நடந்த தேவர் குருபூஜையின் போது எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ் ஒரு அணியாகவும், சசிகலா டிடிவி தினகரன் ஒரு அணியாகவும் இருந்தனர். இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான அதிமுக, தங்களுக்கு தான் தங்க கவசம் கொடுக்க வேண்டும் என வங்கியிடம் முறையிட்டனர்.  பின்னர் கடும் வாக்குவாதத்திற்கு பிறகு, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தங்கக்கவசத்தை வங்கி அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர், ராமநாதபுரம் ஆட்சியர் மூலம் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் தங்க கவசம் கொடுக்கப்பட்டது. பசும்பொன் சென்ற எடப்பாடி பழனிசாமி தங்க கவசம் கொடுத்து குருபூஜையில் கலந்துக்கொண்டார்.

Security has been beefed up on the occasion of Pasumpon Thevar Guru Puja KAK

இபிஎஸ்- ஓபிஎஸ் மோதல்

இதனிடையே 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இது மற்ற சமூகத்தினரிடையே விவாதத்துக்குள்ளான நிலையில், முக்குலத்தோர் சமுதாய மக்களை கொந்தளிப்படைய செய்தது.   இதனிடையே, 2022 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கப்பட்டார். ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனிடம் அளிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு நடந்த தேவர் ஜெயந்தியின் போது இரண்டாவது முறையாக தங்க கவசம் யார் பெறுவது என மோதல் ஏற்பட்டது.

விவகாரம் நீதிமன்றம் சென்றதில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் தங்க கவசத்தை  இரு தரப்பிடமும் தர மறுத்தது. மேலும், ராமநாதபுரம்  மாவட்ட வருவாய் அலுவலரிடம்  தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

Security has been beefed up on the occasion of Pasumpon Thevar Guru Puja KAK

இபிஎஸ்க்கு எதிர்ப்பு

அதை தொடர்ந்து நடைப்பெற்ற தேவர் குருபூஜையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பசும்பொன்னிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு, காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்திய போது தேவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் அதிமுக தொடர்பான வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதவராக வந்த காரணத்தால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கொடுக்கப்பட்டது.

Security has been beefed up on the occasion of Pasumpon Thevar Guru Puja KAK

பாதுகாப்பு அதிகரிப்பு

இந்நிலையில் பசும்பொன்னில் இன்று 116 வது தேவர் ஜெயந்தி மற்றும் 61 வது குருபூஜையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றப்பின் முதன் முறையாக செல்கிறார். எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வரக்கூடாது என தேவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களும் கிழிக்கப்பட்டது. இதன் காரணமாக பசும்பொன்னில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

மோடி முதல்வராக இருக்கும்போது பிரதமராவேனு நினைச்சாரா? அதுமாதிரி தான் இபிஎஸ்.! ரவுசு காட்டும் ராஜன் செல்லப்பா.!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios