கேரளாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு.! வெடிகுண்டு தயாரித்து இயக்கியது எப்படி.? டொமினிக் மார்ட்டின் வாக்குமூலம்
யூடியூப் மூலமாக வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொண்டு கொச்சியில் மூலப் பொருட்களை வாங்கி ஐஇடி குண்டு தயாரித்ததாக போலீசாரிடம் டொமினிக் மார்ட்டின் தெரிவித்துள்ளார். காலை 7.30 மணிக்கு குண்டு வைத்து விட்டு 9.30 மணிக்கு ரிமோட் மூலம் இயக்கியதாகவும் கூறியுள்ளார்.
கேரளாவில் குண்டு வெடிப்பு
கேரள மாநிலம் கொச்சி அருகே களமசேரியில் “யெஹோவா விட்னஸ்” கிறிஸ்தவ மத வழிபாட்டுக்கூட்டத்தில் பிராத்தனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் காலை 9.20 மணி அளவில் முதல் குண்டு வெடித்தது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் அந்த இடம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் பலியானார். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
90 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொடுபுழாவைச் சேர்ந்த குமாரி (53) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இன்று காலை சிறுமியும் பலியானார். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கிறிஸ்தவ மத வழிபாட்டுக்கூட்டத்தில் வெடி குண்டு வைத்து இயக்கியது எப்படி என கைது செய்யப்பட்டுள்ள டொமினிக் மார்ட்டின் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், யூடியூப் மூலமாக வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொண்டு கொச்சியில் மூலப் பொருட்களை வாங்கி ஐஇடி குண்டு தயாரித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
காலை 7.30 மணிக்கு குண்டு வைத்து விட்டு 9.30 மணிக்கு ரிமோட் மூலம் இயக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் பிராத்தனை கூட்டம் நடைபெற்ற இடத்தின் பின்புறம் இருந்தபடி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் குண்டு வெடித்த பின், திருச்சூருக்கு பயணம் செய்தபடியே முகநூலில் லைவ் வீடியோ போட்டதாகவும் டொமினிக் மார்ட்டின் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெடி குண்டு வைத்தது ஏன்.?
முன்னதாக முகநூலில் லைவ் வீடியோவில் பேசும்போது, 16 வருடங்களாக நானும் இந்த அமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்துள்ளேன். பூமியில் வாழ்கின்ற அனைவரும் அழிந்து போவார்கள் ஆனால் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டும் அழிந்து போக மாட்டார்கள் தொடர்ந்து வாழ்வார்கள் என்று போதிக்கின்றனர். இது போன்ற போதனைகள். பிரசாரங்கள் இந்த நாட்டில் தேவையில்லாதது என்பதால் குண்டு வைத்ததாக டொமினிக் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்