Published : Sep 29, 2023, 07:22 AM ISTUpdated : Sep 29, 2023, 10:56 PM IST

Tamil News Live Updates: வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கு.. தீர்ப்பை உறுதி செய்த ஐகோர்ட்

சுருக்கம்

வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

Tamil News Live Updates: வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கு.. தீர்ப்பை உறுதி செய்த ஐகோர்ட்

10:56 PM (IST) Sep 29

திமுக உங்கள் கூட்டணிதான்.. ஏன் கேட்கல.? சித்தராமையாவுக்கு கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

காவிரி சர்ச்சையில் உங்கள் கூட்டணி கட்சிக்கு அழுத்தம் கொடுத்து எங்கள் விவசாய சகோதரர்களுக்காக விலைமதிப்பற்ற தண்ணீரை ஏன் வாங்கவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

10:29 PM (IST) Sep 29

சுப்ரீம் ஸ்டாருடன் நெருக்கமாக நயன்தாரா.. பக்கத்துல 90ஸ் ஹீரோயின் வேற.. ஷாக் கொடுத்த லேடி சூப்பர்ஸ்டார்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பு, பிசினஸ் என கலக்கி வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் திரைப்படமான ஜவான் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

09:48 PM (IST) Sep 29

வருமான வரி அலெர்ட்.. இந்த நபர்கள் 10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் - முழு விபரம் இதோ !!

வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி தான் இது. இந்த நபர்கள் ரூ. 10,00000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கலாம். முழு விவரங்களை சரிபார்ப்பது அவசியம்.

09:47 PM (IST) Sep 29

அம்பானி வீட்டு பார்ட்டியில் டிஷ்யூ பேப்பராக ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதா.. அடேங்கப்பா.!!

உலகின் மிகப்பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீட்டு பார்ட்டியில் டிஷ்யூ பேப்பருக்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

08:44 PM (IST) Sep 29

சென்னை: சைதாப்பேட்டை அருகே பெட்ரோல் பங்கின் மேற்கூறை விழுந்து விபத்து.. மீட்புப் பணிகள் தீவிரம்

சென்னை சைதாப்பேட்டையில் ஜோன்ஸ் ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூறை விழுந்து விபத்தாகியுள்ளது.

07:48 PM (IST) Sep 29

ஆந்திரா: சந்தன மரக்கட்டை கடத்தல்.. போலீஸ் அதிரடி சேஸிங்.. கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

ஆந்திரா அருகே சந்தன மரக் கட்டைகளை கடத்தியதாக மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

07:30 PM (IST) Sep 29

iPhone 14 : அடிச்சது ஜாக்பாட்.. அதிரடியாக குறைந்த ஐபோன் 14 விலை.. எவ்வளவு தெரியுமா.?

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஐபோன் 15க்கு பிறகு, அதன் மற்ற மாடல்கள் விலை அதிரடியாக சரிந்துள்ளது. ஐபோன் 14 எவ்வளவு விலை குறைந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

07:16 PM (IST) Sep 29

பள்ளி மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள்.. 150 இடங்களில் மிரட்டல்.. போலீசிடம் வசமாக சிக்கிய இளைஞர் !!

அமெரிக்காவில் உள்ள பள்ளிகள், ஜெப ஆலயங்கள் மற்றும் பிற பொது இடங்களுக்கு 150 க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்த பெருவியன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

05:50 PM (IST) Sep 29

50 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான்.!!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவற்றின் சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை மற்றும் பயன்பாட்டின் எளிமை காரணமாக இந்தியாவில் பிரபலமடைந்து வருகின்றன. ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியுடன் மின்சாரத்தில் இயங்கும் இந்த இரு சக்கர வாகனங்கள் வழக்கமான ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக செலவு குறைந்ததாக கருதப்படுகிறது.

05:12 PM (IST) Sep 29

அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 57க்கும் மேற்பட்டோர் பலி - மிலாடி நபி கொண்டாட்டத்தின் போது சோகம்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா ஆகிய மாகாணங்களில் உள்ள மசூதிகளில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 57க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

04:51 PM (IST) Sep 29

நாம் எந்த மாநிலமாக இருந்தாலும் சரி.. இதுதான் வழி.. காவிரி பிரச்னைக்கு தீர்வு சொன்ன சத்குரு..!

காவிரி நீர் பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே பெரும் பிரச்னை நடந்து வரும் நிலையில், இரு மாநில பிரச்னையை சுமூகமாக தீர்க்க வழியை கூறியுள்ளார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு.

04:51 PM (IST) Sep 29

நாம் எந்த மாநிலமாக இருந்தாலும் சரி.. இதுதான் வழி.. காவிரி பிரச்னைக்கு தீர்வு சொன்ன சத்குரு..!

காவிரி நீர் பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே பெரும் பிரச்னை நடந்து வரும் நிலையில், இரு மாநில பிரச்னையை சுமூகமாக தீர்க்க வழியை கூறியுள்ளார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு.

04:06 PM (IST) Sep 29

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்.13 வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

03:52 PM (IST) Sep 29

பித்ரு தோஷம் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? தோஷம் விலக எளிய பரிகாரங்கள்

முன்னோர்கள் மிகவும் கோபமாக இருந்தால் பித்ரு தோஷம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் குடும்பத்தில் பல்வேறு சண்டை, சச்சரவுகள் ஏற்படுகிறது.

03:47 PM (IST) Sep 29

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரிவுபடுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்!

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரிவுபடுத்தப்பட வாய்புள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்

03:30 PM (IST) Sep 29

கர்நாடகா பந்த்: வட்டாள் நாகராஜ் கைது!

கன்னட சலவலி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்

03:20 PM (IST) Sep 29

நோயாளி வயிற்றுக்குள் இயர்போன்கள்.. இரும்பு பொருட்கள்.. ஆடிப்போன மருத்துவர்கள் - பதறவைக்கும் சம்பவம்

பல ஆண்டுகளாக வயிற்று வலியால் துடித்த ஒருவரை மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்தனர்.

02:05 PM (IST) Sep 29

ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா: ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி அளித்த ஆந்திர முதல்வர்!

ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டத்தின் கீழ், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் வழங்கினார்

01:53 PM (IST) Sep 29

ஜெயிலர் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய லியோ

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ஜெயிலர் திரைப்படம் ஜெர்மனியில் வசூலித்த ஒட்டுமொத்த கலெக்‌ஷனையும் லியோ படம் முன்பதிவிலேயே முறியடித்து உள்ளது.

01:17 PM (IST) Sep 29

போராட்டக் களமான பேராசியர் அன்பழகன் வளாகம்: 17 ஆசிரியர்கள் மயக்கம்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 17 பேர் மயக்கமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

01:03 PM (IST) Sep 29

பொண்டாட்டி இருக்கும் போதே மாமியாரை மடக்கிய மருமகன்.. விஷயம் தெரிந்த மைத்துனர்! இறுதியில் நடந்தது என்ன?

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டது போல் தண்டவாளத்தில் உடலை வீசிய சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12:29 PM (IST) Sep 29

கர்நாடகா செய்வது நியாயமல்ல: துரைமுருகன்!

காவிரி விவகாரத்தில் கர்நாடகா செய்வது நியாயமல்ல என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

11:50 AM (IST) Sep 29

விவசாயத் தலைவர்களை சந்திக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா!

கர்நாடக முழு அடைப்பு போராட்டத்திற்கிடையே, விவசாயத் தலைவர்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திக்கவுள்ளார்

11:23 AM (IST) Sep 29

இந்தியாவுடன் நெருங்கிய உறவு: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி!

இந்தியாவுடன் நெருங்கிய உறவுக்கு கனடா உறுதி பூண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்

11:18 AM (IST) Sep 29

வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கு.. 215 பேரின் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.!

வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கில் 2011ம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

10:56 AM (IST) Sep 29

ஒரு கன்னட நடிகரின் படம் கூட தமிழ்நாட்டில் ஓடாது.. சித்தார்த்தை எதிர்த்தவர்களுக்கு வார்னிங் கொடுத்த சாட்டை துரை

சித்தா பட விழாவில் புகுந்து நடிகர் சித்தார்த்தை பேசவிடாமல் தடுத்த போராட்டக்காரர்களை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் கடுமையாக சாடி உள்ளார்.

10:47 AM (IST) Sep 29

ராணிப்பேட்டை சிப்காட்டில் மின்சாரம் தாக்கி ஊழியர்கள் பலி: தொழிற்சாலையில் போராட்டம்!

ராணிப்பேட்டை சிப்காட்டில் அடுத்தடுத்து 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தில் சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

10:16 AM (IST) Sep 29

இறைவன் படம் எப்படி இருக்கு? மக்கள் கருத்து

ஜெயம் ரவி நடித்த இறைவன் பட விமர்சனம்

10:15 AM (IST) Sep 29

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரக் கூட்டம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
 

10:15 AM (IST) Sep 29

Oppo A18 அறிமுகம்: 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி - என்னென்ன அம்சம்?

Oppo A-சீரிஸ் வரிசையில் புத்தம் புதிய Oppo A18 மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் குறித்து இங்கு காணலாம்

10:15 AM (IST) Sep 29

குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி மீலாது நபி விழாவை கொண்டாடிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

கோவை தெற்கு  மாவட்ட இளைஞரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடத்தப்பட்ட மீலாது நபி விழா, குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

09:42 AM (IST) Sep 29

3 மணிநேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் வார்னிங்..!

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

09:24 AM (IST) Sep 29

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு.. முழக்கங்களை எழுப்பி கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் சாலையில் தமிழகத்திற்கு எதிராக முழக்கங்களை கன்னட அமைப்பினர் எழுப்பி வருகின்றனர்.

09:18 AM (IST) Sep 29

பெங்களூரு மற்றும் மண்டியாவில் சாலை மறியல் போராட்டம்... கன்னட அமைப்பினர் கைது

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூரு மற்றும் மண்டியாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு அமல் இருக்கும் நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

08:49 AM (IST) Sep 29

‘சந்திரமுகி 2’ முதல் நாள் வசூல்

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

08:46 AM (IST) Sep 29

சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? மக்கள் கருத்து

சந்திரமுகி 2 படத்தின் விமர்சனம்

08:45 AM (IST) Sep 29

லியோ பாடலில் தாக்கப்பட்டாரா ரஜினி!

லியோ படத்திற்காக அனிருத் இசையமைத்த இரண்டாவது பாடலான badass பாடலின் வரிகளை பார்த்த நெட்டிசன்கள் இது ரஜினியை தாக்கும் வகையில் உள்ளதாக ஒப்பிட்டு வருகின்றனர்.

08:31 AM (IST) Sep 29

தமிழ்நாடு பதிவு எண் வாகனங்கள் மாநில எல்லையில் நிறுத்தம்

கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்  தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள், ஈரோடு பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

08:27 AM (IST) Sep 29

கர்நாடகாவில் பந்த்..! தமிழக எல்லையில் பதற்றம்- நிலைமையை கண்காணிக்க மாவட்ட எஸ்.பி.களுக்கு டிஜிபி உத்தரவு

கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெற்று வரும் நிலையில், எல்லை பகுதிகளில் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நோதனை சாவடிகளில் உயர் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  
 

08:23 AM (IST) Sep 29

சித்தா பட புரோமோஷன்.. வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சித்தார்த்

காவிரி நீர் விவகாரம் பெரும் பிரச்சனையாக மீண்டும் உருவெடுத்துள்ள நிலையில், பெங்களூருவுக்கு தனது சித்தா பட ப்ரமோஷன் பணிக்காக சென்ற நடிகர் சித்தார்த், மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.  


More Trending News