பழைய கதையை பட்டி டிங்கரிங் பார்த்து எடுக்கப்பட்ட ‘சந்திரமுகி 2’ படத்துக்கு முதல் நாளே இத்தனை கோடி கலெக்ஷனா?
பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.
chandramukhi 2
சந்திரமுகி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரஜினியும், ஜோதிகாவும் தான். அந்த அளவுக்கு அப்படத்தில் இவர்கள் இருவரது நடிப்பு பேசப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக வடிவேலுவின் காமெடி, பி வாசு டைரக்ஷன் மற்றும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசை ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருந்ததன் காரணமாகவே சந்திரமுகி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. சந்திரமுகி முதல் பாகம் ரிலீஸ் ஆகி 18 ஆண்டுகளுக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் பி வாசு.
kangana ranaut
இப்படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. இப்படத்தை முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது, பின்னர் அந்நிறுவனம் இப்படத்தில் இருந்து வெளியேறியதால் லைகா நிறுவனம் பக்கம் சென்றது சந்திரமுகி 2. அதேபோல் சந்திரமுகியாக நடிக்க ஜோதிகா, சிம்ரன், காஜல் உள்பட பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்ததை அடுத்து இறுதியாக கங்கனா ரனாவத் அந்த வேடத்தில் நடிக்க கமிட் ஆனார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Raghava Lawrence
பின்னர் ஒருவழியாக படத்தை எடுத்து செப்டம்பர் 15-ந் தேதி ரிலீஸ் ஆகும் என்றெல்லாம் அறிவித்த பின்னர் தொழில்நுட்ப பணிகள் நிறைவடையாததன் காரணமாக செப்டம்பர் 28-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். இப்படி பல்வேறு தடைகளை கடந்து இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தின் கதையை பொறுத்தவரை சந்திரமுகி முதல் பாக கதையை தான் அப்படியே பட்டி டிங்கரிங் பார்த்து எடுத்து வைத்திருக்கிறார் என்கிற விமர்சனங்கள் எழுந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
chandramukhi 2 box office collection
இந்நிலையில், சந்திரமுகி 2 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாளிலேயே இப்படம் உலக அளவில் ரூ.7.5 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளதாம். குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்திற்கு 4.5 கோடி வசூல் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மிலாது நபி விடுமுறை நாள் என்பதனால் இந்த அளவு வசூலை வாரிக்குவித்து உள்ளது இப்படம். அடுத்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...சூப்பரா... சுமாரா? ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ