50 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான்.!!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவற்றின் சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை மற்றும் பயன்பாட்டின் எளிமை காரணமாக இந்தியாவில் பிரபலமடைந்து வருகின்றன. ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியுடன் மின்சாரத்தில் இயங்கும் இந்த இரு சக்கர வாகனங்கள் வழக்கமான ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக செலவு குறைந்ததாக கருதப்படுகிறது.
Best Electric Scooters in India
இந்தியாவில் சிறந்த 6 ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி பார்க்கலாம். ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான விலை வரம்பிற்கு உட்பட்ட இந்தியாவின் சிறந்த 6 ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி பார்க்கலாம்.
Hero Electric Flash
ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 48V, 28Ah Li-ion பேட்டரியுடன் வருகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கிமீ வரை செல்லும். ஸ்கூட்டரில் எல்இடி விளக்குகள் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளது. இதன் விலை ரூ.59,640 ஆகும்.
Hero Electric Nyx
ஹீரோ எலக்ட்ரிக் Nyx எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 48V, 24Ah Li-ion பேட்டரி கொண்ட இந்த இடைப்பட்ட மின்சார ஸ்கூட்டர், மணிக்கு 42 கிமீ வேகத்தில் செல்லும். ஸ்கூட்டரில் எல்இடி விளக்குகள், டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் 10 இன்ச் வீல் சைஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ. 86,540 ஆகும்.
Hero Electric Optima CX
ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா சிஎக்ஸ் ஸ்கூட்டரை, ஒரு முறை சார்ஜ் செய்தால் மணிக்கு 42 கிமீ வேகம் மற்றும் 70 கிமீ வரை செல்லும். ஸ்கூட்டர் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், மொபைல் சார்ஜிங் பாயின்ட் மற்றும் 51.2V / 30Ah பேட்டரி திறன்/ரேட்டிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.85,190 ஆகும்.
Hero Electric Cruz
ஹீரோ எலக்ட்ரிக் குரூஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 50,000 ரூபாய்க்குள் இருக்கும் இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒன்றாகும். இதன் 250 வாட் மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தையும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கிமீ வரை செல்லும். ஸ்கூட்டரில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் மொபைல் சார்ஜிங் பாயின்ட் உள்ளது. இதன் விலை சுமார் ரூ. 37,390 ஆகும்.
Hero Electric Optima
ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா ஒரு ஸ்டைலான மற்றும் நம்பகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இது மணிக்கு 25 கிமீ வேகம் மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிமீ வரை செல்லும். ஸ்கூட்டரில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், மொபைல் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் ஆகியவை உள்ளன. இதன் விலை ரூ. 77,690 ஆகும்.
Hero Electric Atria LX
ஹீரோ எலக்ட்ரிக் ஏட்ரியா எல்எக்ஸ் ஒரு சக்திவாய்ந்த 48V 28Ah லித்தியம்-அயன் பேட்டரி மற்றும் 550W BLDC மோட்டார் கொண்ட ஸ்கூட்டர் ஆகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிமீ வரை செல்லும். இதன் விலை ரூ.63,640க்கு வாங்கலாம்.