நாம் எந்த மாநிலமாக இருந்தாலும் சரி.. இதுதான் வழி.. காவிரி பிரச்னைக்கு தீர்வு சொன்ன சத்குரு..!
காவிரி நீர் பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே பெரும் பிரச்னை நடந்து வரும் நிலையில், இரு மாநில பிரச்னையை சுமூகமாக தீர்க்க வழியை கூறியுள்ளார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு.
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடியது தமிழ்நாடுஅரசு. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாத கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு - கர்நாடக இடையேயான பல்வேறு சேவைகள் தடைப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு காவேரி பிரச்சினை தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சத்குரு வெளியிட்டுள்ள பதிவில், “நாம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. ஆனால் கோடைக்காலத்தில் வறண்டு கிடக்கிறது காவிரித் தாய். காவிரி வருடத்தில் 12 மாதங்கள் மிகுதியாகப் பாயும். பெரிய அளவிலான மரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயம் இடமாகும். சுமார் 83,000 சதுர கிலோமீட்டர் காவேரிப் படுகையில் தாவரங்களை வளர்ப்பது மட்டுமே ஒரே வழி. வறண்டு கிடக்கும் தண்ணீருக்காக போராடுவதை விட காவிரி அன்னையை வலுப்படுத்தி மேம்படுத்துவோம். ஞானம் வெல்லட்டும்” என்று கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D