சென்னை: சைதாப்பேட்டை அருகே பெட்ரோல் பங்கின் மேற்கூறை விழுந்து விபத்து.. ஒருவர் பலி.. சிகிச்சையில் 13 பேர்
சென்னை சைதாப்பேட்டையில் ஜோன்ஸ் ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூறை விழுந்து விபத்தாகியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 13 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனமழை எதிரொலி காரணமாக சைதாபேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்தது. இதற்கான மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் கனமழை பெய்து வருவதால் சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மழைக்கு ஒதுங்கியவர்கள், பெட்ரோல் போட வந்தவர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சரிந்து விழுந்த மேற்கூரைக்கு அடியில் சிக்கி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இதனையடுத்து தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
சரிந்து விழுந்த மேற்கூரைக்கு அடியில் இருந்து 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், 53 வயதான கந்தசாமி என்பவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D