Published : Feb 14, 2024, 07:23 AM ISTUpdated : Feb 14, 2024, 11:52 PM IST

Tamil News Live Updates: சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நாளை தொடக்கம்..!

சுருக்கம்

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்க இருக்கிற தேர்வு மார்ச் 13-ம் தேதி நிறைவடைகிறது.

Tamil News Live Updates: சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நாளை தொடக்கம்..!

11:52 PM (IST) Feb 14

வெறும் ரூ.3000 இருந்தா போதும்.. இனி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஈஸியா அப்கிரேட் பண்ணலாம் மக்களே..

ஐவூமி (iVOOMi) மின்சார இரு சக்கர வாகன மேம்படுத்தல் திட்டத்தை ரூ.2,999க்கு அறிமுகப்படுத்துகிறது.

11:20 PM (IST) Feb 14

40 தொகுதி.. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாரான திமுக.. இளைஞரணிக்கு உத்தரவு போட்ட உதயநிதி ஸ்டாலின்..!

நாடாளுமன்ற தேர்தலில் 40/40 என்ற லட்சியத்தை எட்டுகிற வகையில் அயராது களப்பணியாற்ற வேண்டும் என இளைஞரணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினோம் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

10:27 PM (IST) Feb 14

அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி - போட்டோ ஆல்பம்.!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) திறந்து வைத்தார்.

09:57 PM (IST) Feb 14

காதல் தினத்தில் அர்ஜுன் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தம்பி ராமையா மகன்.. கூட மாமனார் வேற இருக்காரு..

விரைவில் நடிகர் அர்ஜூனின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும், காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இருவரும் கோலாகலமாக காதலர் தினத்தை கொண்டாடி உள்ளனர்.

08:39 PM (IST) Feb 14

ரேணுகா சவுத்ரியை ராஜ்யசபாவுக்கு அனுப்பும் காங்கிரஸ்: பின்னணி என்ன?

தெலங்கானா மாநிலத்தில் இருந்து ரேணுகா சவுத்ரி, அனில் குமார் யாதவ் ஆகிய இருவரை மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சி அனுப்பவுள்ளது

 

08:14 PM (IST) Feb 14

இனி ஏடிஎம்மிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. பணத்தை இப்படியும் பெறலாம்.. எப்படி தெரியுமா?

இப்போது ஏடிஎம்மிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, இந்த வழியில் நீங்கள் உடனடியாக பணம் பெற முடியும். இது தொடர்பான விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

08:04 PM (IST) Feb 14

சென்னை: பீர் பாட்டில் வீசி மாணவர்கள் மோதல்.. கலவர பூமியான ரயில் நிலையம்.. 3 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்!

சென்னை ரயில் நிலையத்தில் இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதும் வீடியோ வெளியான நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

07:34 PM (IST) Feb 14

அபுதாபி இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி: ஆரத்தி வழிபாடு!

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து வழிபாடு செய்தார்

 

06:49 PM (IST) Feb 14

அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார் நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தார்

 

06:42 PM (IST) Feb 14

பிரீமியம் பைக்கை அறிமுகப்படுத்திய ஹீரோ.. மாஸ் காட்டும் மாவ்ரிக் 440.. விலை எவ்வளவு தெரியுமா?

ஹீரோ மாவ்ரிக் 440 என்ற பிரீமியம் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

06:20 PM (IST) Feb 14

துபாயின் முதல் இந்து கோவில்.. கோவிலின் அமைப்பு முதல் சிறப்பு அம்சங்கள் வரை.. முழு தகவல்கள் இதோ!!

துபாயின் முதல் இந்து கோவிலான சுவாமி நாராயண் கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த கோவிலின் சிறப்புகள் மற்றும் முக்கியமான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

06:06 PM (IST) Feb 14

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: நாளை பிற்பகல் மீண்டும் விசாரணை!

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை பிற்பகல் மீண்டும் விசாரணை நடைபெறும் என  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

 

05:30 PM (IST) Feb 14

பாஜகவில் இணைந்த கோவை திமுகவினர்!

திமுக நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்

 

05:05 PM (IST) Feb 14

சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவு.. நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்..

சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

05:00 PM (IST) Feb 14

பாஜகவை தூங்கவிடாமல் செய்கிறது திமுக - முதல்வர் ஸ்டாலின்

பாஜகவை திமுக தூங்கவிடாமல் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

04:05 PM (IST) Feb 14

ராஜ்யசபா தேர்தல்: பாஜகவில் நேற்று இணைந்த அசோக் சவானுக்கு வாய்ப்பு!

ராஜ்யசபா தேர்தலில் பாஜகவில் நேற்று இணைந்த அசோக் சவானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது

 

03:45 PM (IST) Feb 14

காதல் கணவருடன் தாஜ்மஹாலில் காதலர் தினத்தை கொண்டாடிய சீரியல் நடிகை ரித்திகா - வைரலாகும் போட்டோஸ்

விஜய் டிவி சீரியலில் நடித்து பிரபலமான ரித்திகா தமிழ்செல்வி தன்னுடைய கணவருடன் தாஜ்மகாலில் காதலர் தினத்தை கொண்டாடி இருக்கிறார்.

03:22 PM (IST) Feb 14

ஊழலற்ற ஆட்சி உலகிற்கு தேவை: துபாயில் பிரதமர் மோடி பேச்சு!

ஊழலற்ற ஆட்சி உலகிற்கு தேவை என துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்

 

03:15 PM (IST) Feb 14

நல்ல வேள அவங்க நடிக்கல... பாகுபலியில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோயினா?

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்த பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகை பற்றி பார்க்கலாம்.

02:42 PM (IST) Feb 14

விவசாய ஏற்றுமதி 3ஆவது ஆண்டாக சரிவு: விவசாயிகளின் வருமானம் பாதிப்பு!

விவசாய ஏற்றுமதி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சரிந்ததால் விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது

 

02:22 PM (IST) Feb 14

குழந்தைகளுக்கு கியூட்டாக புரபோஸ் செய்து... காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் லவ்வர்ஸ் டே போட்டோஸ்

நடிகை நயன்தாரா, தன்னுடைய இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலகிற்கு கியூட்டாக புரபோஸ் செய்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

01:52 PM (IST) Feb 14

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் பாஜகவில் இணைந்தார்!

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

 

01:34 PM (IST) Feb 14

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தர அமலாக்கத்துறை எதிர்ப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து தொடர்ச்சியாக ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாது. செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

01:29 PM (IST) Feb 14

சண்டைக்கோழியாக இருந்து மீண்டும் ஜிகிரி தோஸ்த் ஆக மாறிய விஷ்ணு விஷால் - சூரி... பிரச்சனை என்ன ஆனது?

லால் சலாம் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், தனக்கும் நடிகர் சூரிக்கும் இடையிலான பிரச்சனை தீர்ந்து தற்போது தாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டதாக கூறி உள்ளார்.

12:49 PM (IST) Feb 14

காத்துவாக்குல 3 காதல்! ஏமாற்றிய சிம்பு, பிரபுதேவா... காப்பாற்றிய விக்கி - நயன்தாராவின் ஃபுல் லவ் ஸ்டோரி இதோ

சினிமாவில் ஏராளமான காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் இறுதியாக காதல் திருமணம் செய்து கெத்து காட்டிய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் லவ் ஸ்டோரி பற்றி பார்க்கலாம்.

11:55 AM (IST) Feb 14

முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்.... புது காதலியை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் அபிஷேக் ராஜா - வைரலாகும் போட்டோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான அபிஷேக் ராஜா, தன்னுடைய புது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.

11:19 AM (IST) Feb 14

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர்

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கையை கைவிடக் கோரியும் சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானங்களை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். 

11:06 AM (IST) Feb 14

சென்னை மக்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்... புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் மூடப்படுகிறது - பின்னணி என்ன?

சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

10:49 AM (IST) Feb 14

மீண்டும் மாநிலங்களவைக்கே செல்கிறார் எல்.முருகன்!

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய தலைமை வெளியிட்டுள்ளது. 

10:36 AM (IST) Feb 14

குளு குளு வெண்பனி போல... காதலர் தினத்தை வெளிநாட்டில் கொண்டாடும் பிரியா பவானி சங்கர் - வைரலாகும் போட்டோஸ் இதோ

காதலர் தினத்தை கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றுள்ள நடிகை பிரியா பவானி சங்கர், அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

09:40 AM (IST) Feb 14

வில்லனா வேண்டவே வேண்டாம் என விஜய் சேதுபதி ரிஜெக்ட் பண்ணிய பிரம்மாண்ட பட வாய்ப்பை தட்டிதூக்கிய ஷிவ ராஜ்குமார்

இனி வில்லன் வேடங்களில் நடிக்கக்கூடாது என முடிவெடுத்துள்ள விஜய் சேதுபதி, பிரம்மாண்ட வாய்ப்பு ஒன்றை நழுவவிட்டுள்ள தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

09:21 AM (IST) Feb 14

நெல்லையில் கடந்த 3 ஆண்டுகளில் 1101 மைனர் பெண்களுக்கு பிரசவம்! கேக்கும்போதே குலை நடுங்க செய்கிறது! பாஜக!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்ட இளம் மைனர் பெண்கள் 1101 பேருக்கு பிரசவம் நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளாார். 

09:20 AM (IST) Feb 14

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. 

08:31 AM (IST) Feb 14

நோ சொன்ன மிருணாள் தாக்கூர்... முருகதாஸ் படத்தில் டிரெண்டிங் ஹீரோயின் உடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் எஸ்.கே.23 திரைப்படத்தில் ருக்மிணி வசந்த் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

07:37 AM (IST) Feb 14

சென்னையில் 634வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!

சென்னையில் 634வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

07:28 AM (IST) Feb 14

மக்கள் நீதி மய்யத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.. குஷியில் கமல்..!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

07:27 AM (IST) Feb 14

நிதி நிலை சரியில்லை! அரசு ஊழியர்கள் போராட்டத்தை கை விட்டுட்டு! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! நிதி அமைச்சர்.!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டங்களை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்துள்ளார்.


More Trending News