MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சண்டைக்கோழியாக இருந்து மீண்டும் ஜிகிரி தோஸ்த் ஆக மாறிய விஷ்ணு விஷால் - சூரி... பிரச்சனை என்ன ஆனது?

சண்டைக்கோழியாக இருந்து மீண்டும் ஜிகிரி தோஸ்த் ஆக மாறிய விஷ்ணு விஷால் - சூரி... பிரச்சனை என்ன ஆனது?

லால் சலாம் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், தனக்கும் நடிகர் சூரிக்கும் இடையிலான பிரச்சனை தீர்ந்து தற்போது தாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டதாக கூறி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 14 2024, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Soori, Vishnu Vishal

Soori, Vishnu Vishal

நடிகர் சூரியும், விஷ்ணு விஷாலும் தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் வெண்ணிலா கபடி குழு, இதில் சூரி காமெடியனாகவும், விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் நடித்திருந்தார். சுசீந்திரன் இயக்கிய இப்படம் சூரி, விஷ்ணு விஷால் இருவருக்குமே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடி பேமஸ் ஆனதன் காரணமாக அவருக்கு புரோட்டா சூரி என்று பெயர் வந்தது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இப்படம் ரீச் ஆனது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Soori

Soori

வெண்ணிலா கபடி குழு படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரியும், விஷ்ணு விஷாலும் சேர்ந்து குள்ளநரி கூட்டம், ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் போன்ற படங்களில் நடித்தனர். இந்த படங்களும் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகவே அமைந்தது. இதனால் கோலிவுட்டின் சூப்பர் ஹிட் காம்போவாக இவர்கள் திகழ்ந்து வந்தனர். இதையடுத்து இவர்கள் காம்போவில் உருவான படம் தான் வீரதீர சூரன். இப்படத்தில் சூரிக்கு ரூ.40 லட்சம் சம்பளம் பேசப்பட்டு இருந்ததாம்.

இதையும் படியுங்கள்... விஷ்ணு விஷால் குடும்பத்தில் இன்னொரு ஹீரோ! 'ஓஹோ எந்தன் பேபி' பூஜையுடன் துவங்கியது.. ஹீரோயின் யார் தெரியுமா?

34
Vishnu Vishal

Vishnu Vishal

ஆனால் அதற்கு பதில் சென்னை சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலாவும், தயாரிப்பாளர் அன்புவேல்ராஜனும் உறுதியளித்திருக்கிறார். ஆனால் அந்த நிலத்துக்காக தன்னிடம் கூடுதலாக ரூ.2.70 கோடி வாங்கி இருவரும் மோசடி செய்துவிட்டதாக நடிகர் சூரி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பாக அவர் போலீசிலும் புகார் அளித்ததால் விஷ்ணு விஷாலுக்கும் சூரிக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது.

44
Vishnu Vishal about soori issue

Vishnu Vishal about soori issue

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பேசாமல் இருந்த இவர்கள் தற்போது மீண்டும் இணைந்துள்ள தகவல் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருகிறது. லால் சலாம் படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி அளித்த விஷ்ணு விஷால், சூரியும் நானும் அந்த பிரச்சனையை பேசி சரிசெய்துவிட்டதாக கூறினார். எங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணமே மூன்றாவது நபர் ஒருவர் தான் என்பது நாங்கள் மனம்விட்டு பேசும்போது தான் தெரிந்தது. விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என்றும் விஷ்ணு விஷால் கூறி உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

இதையும் படியுங்கள்... விவாகரத்து கேட்டதே அவள் தான்! கோர்ட்டில் கூட இதான் நடந்துச்சு? 2-வது திருமணத்தின் விஷ்ணு விஷால் போட்ட கண்டீஷன்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூரி (நடிகர்)
விஷ்ணு விஷால்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved