MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விவாகரத்து கேட்டதே அவள் தான்! கோர்ட்டில் கூட இதான் நடந்துச்சு? 2-வது திருமணத்தின் விஷ்ணு விஷால் போட்ட கண்டீஷன்

விவாகரத்து கேட்டதே அவள் தான்! கோர்ட்டில் கூட இதான் நடந்துச்சு? 2-வது திருமணத்தின் விஷ்ணு விஷால் போட்ட கண்டீஷன்

நடிகர் விஷ்ணு விஷால் முதல் முறையாக, தன்னுடைய முதல் மனைவி ரஜினியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தது முதல் இரண்டாவது திருமணம் வரை நடந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். 

3 Min read
Author : manimegalai a
Published : Feb 12 2024, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Vishnu Vishal

Vishnu Vishal

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது 'லால் சலாம்' திரைப்படம். இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால், பிரபல இணையதளத்துக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் முதல் முறையாக தன்னுடைய விவாகரத்து மற்றும் இரண்டாவது திருமணம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Vishnu Vishal

Vishnu Vishal

கிரிக்கெட் விளையாட்டு வீரராக மாற வேண்டும் என நினைத்தவர் விஷ்ணு விஷால். ஆனால் ஒரு சில காரணங்களால் கிரிக்கெட் பயிற்சியை விட்டே முழுமையாக விலகிய விஷ்ணு விஷால் ஐடி துறையில் பணியாற்ற சென்ற நிலையில், பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். அந்த வகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்ததால், அடுத்தடுத்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர் பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வெள்ளன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், போன்ற படங்களில் நடித்தார்.

Suriya: விபத்தில் உயிரிழந்த நற்பணி மன்ற மாவட்ட தலைவர்! வீடு தேடி சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய சூர்யா!
 

38
vishnu vishal

vishnu vishal

குறிப்பாக நீர் பறவை படத்தில் நடிக்கும் போது படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய பிரபல நடிகர் நடராஜன் மகள் ரஜினியை காதலித்த விஷ்ணு விஷால் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
 

48
Vishnu

Vishnu

இந்த தம்பதிகளுக்கு தற்போது ஆரியன் என்கிற மகன் ஒருவரும்  உள்ளார். 2010 ஆம் ஆண்டு ரஜினியை காதலித்து கரம் பிடித்த விஷ்ணு விஷால் 2018 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இவர்களின் விவாகரத்துக்கு பின்னர் எந்த ஒரு பேட்டியிலும் தன்னுடைய விவாகரத்து குறித்து பேசாத விஷ்ணு விஷால், முதல் முறையாக தற்போது வாய் திறந்துள்ளார்.

சூப்பர் உமனாக மாறிவரும் கதாநாயகிகள்! காஜல் அகர்வாலை தொடர்ந்து... தனுஷ் பட நாயகி சம்யுக்தா எடுக்கும் ரிஸ்க்!

58
vishnu vishal

vishnu vishal

இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில் தன்னுடைய முன்னாள் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்கிற முடிவை நான் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் கேட்கும்போது கூட அவர்தான் என்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என கூறினார். நான் அமைதியாக தான் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.

68

இதைத்தொடர்ந்து பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறித்து பேசியுள்ளதாவது, ரஜினியை பிரிந்த பிறகு என்னுடைய வாழ்க்கையில் மீண்டும் திருமணம் செய்து கொள்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இனி தனி வாழ்க்கையில் தனியாகத்தான் இருக்கப் போகிறோம் என்று வேடுவுக்கு வந்து விட்டேன். அப்போதுதான் ஜுவாலா கட்டாவை சந்தித்து பழக ஆரம்பித்தேன். மிகவும் பாசிட்டிவான பெண் அவர். என்னுடன் பழக துவங்கியதுமே எனக்கு மகன் ஒருவன் இருப்பதையும் நான் இனி திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்பதையும் தெளிவாக கூறினேன். ஆனால் அவர் என்னை பிடித்திருக்கிறது என்று கூறினார்.

7 மாசமா வேலையில்லாமல் இருந்தேன்... ஒருவழியா வாய்ப்பு கிடைச்சிருச்சு - மீண்டு(ம்) நடிக்க வந்த சமந்தா
 

78

அதற்குப் பின் தான் ஒரு பிரச்சினையை காட்டி மற்றவர்களின் ஆசையை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது. அவரும் ஒரு விவாகரத்தான பெண்தான் அவருக்கும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை எல்லாம் இருந்தது, அதேபோல் ஜுவாலாவின் மென்மையான குணம் எனக்கு பிடித்திருந்தது, இதைத் தொடர்ந்து இரண்டாவதாக  அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து என் முடிவை மாற்றிக் கொண்டேன்.
 

88

மேலும் ஜுவாலா கட்டாவிடம் திருமணத்திற்கு முன்பே என்னுடைய மகனுக்காக மீண்டும் நான் ரஜினியுடன் சென்றால் என்ன செய்வாய் என்று கேட்டேன்? அதற்காக அதுதான் என்னுடைய தலையெழுத்து என்றால் நான் என்ன செய்ய முடியும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயம் மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

களத்தூர் கண்ணம்மாவில் 500 ரூபாய்.. அதன் பின் விஸ்வரூபம் எடுத்த "ஆண்டவர்" - இந்தியன் 2வில் பெற்ற சம்பளம் என்ன?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஷ்ணு விஷால்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved