வில்லனா வேண்டவே வேண்டாம் என விஜய் சேதுபதி ரிஜெக்ட் பண்ணிய பிரம்மாண்ட பட வாய்ப்பை தட்டிதூக்கிய ஷிவ ராஜ்குமார்
இனி வில்லன் வேடங்களில் நடிக்கக்கூடாது என முடிவெடுத்துள்ள விஜய் சேதுபதி, பிரம்மாண்ட வாய்ப்பு ஒன்றை நழுவவிட்டுள்ள தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
vijay sethupathi
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் வில்லனாக உருவெடுத்தவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக பேமஸ் ஆனதை விட வில்லனாக பாலிவுட் வரை பிரபலம் ஆனார். இதனால் விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து வில்லன் வாய்ப்புகள் அதிகளவில் குவிந்த வண்ணம் இருந்தன. வில்லனாக நடிப்பதால் தன்னுடைய ஹீரோ இமேஜ் டேமேஜ் ஆவதோடு, தன்னுடைய படங்களின் பிசினஸும் பாதிக்கப்படுவதை உணர்ந்த விஜய் சேதுபதி இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை என அண்மையில் அறிவித்தார்.
vijay sethupathi rejected RC16
அதுமட்டுமின்றி கெஸ்ட் ரோல்களிலும் இனி நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறி உள்ள விஜய் சேதுபதி, இனி முழுநேர ஹீரோவாக நடிக்க முடிவெடுத்துள்ளார். அவர் நடிப்பில் தற்போது மகாராஜா, விடுதலை 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இப்படி பிசியான நடிகராக வலம் வரும் இவர் பிரம்மாண்ட படமொன்றில் நடிக்க மறுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... விஜயகாந்த் இடத்தை விஜய் சேதுபதி Replace செய்துவிட்டார்... அடுத்த கேப்டன் என புகழ்ந்த பிரபல தயாரிப்பாளர்
Ram charan, Buchi Babu sana
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரண், உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை தான் படக்குழு அணுகி இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே புச்சி பாபு சனா இயக்கிய உப்பென்னா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். ஆனால் ராம்சரணுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம் விஜய் சேதுபதி.
Rc16 villain shiva rajkumar
விஜய் சேதுபதி தவறவிட்ட இந்த பிரம்மாண்ட வாய்ப்பு தற்போது கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமாருக்கு சென்றிருக்கிறது. அவர்தான் ஆர்.சி. 16 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்க உள்ளாராம். ஆர்.சி.16 படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Vijay Sethupathi Net Worth: டாப் ஹீரோ.. மாஸ் வில்லன்! விஜய் சேதுபதியின் சொத்து மற்றும் கார் கலெக்ஷன் விவரம்!