நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 4 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

12:21 AM (IST) Sep 14
வேலை இல்லாதவர்களுக்கு ரூ.11,000 ஊக்கத்தொகை கிடைக்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம் பற்றி இங்கு காணலாம்.
11:25 PM (IST) Sep 13
சூரிய கிரகணம் மகாளய நாளில் அதாவது அக்டோபர் 14 அன்று நிகழும். 2023ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இதுவாகும்.
10:47 PM (IST) Sep 13
செப்டம்பர் 18 முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
10:23 PM (IST) Sep 13
ஜவான் படத்தில் நடித்துள்ள நடிகர்களான ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சன்யா மல்ஹோத்ரா மற்றும் பிரியாமணி ஆகியோரும் இந்த வாரத்தின் பிரபலமான இந்திய பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
09:51 PM (IST) Sep 13
மாட்டுப் பால் பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு 50% மானியம் வழங்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திட்டம் தொடர்பான முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
08:40 PM (IST) Sep 13
திருடர்களுக்கு ஏன் ரஜினி ஆதரவு தெரிவிக்கிறார் என ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா கேள்வி சரமாரியாக எழுப்பியுள்ளார்
08:32 PM (IST) Sep 13
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியும், கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உண்டு. தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள உள்ளார் ஓவியா.
08:00 PM (IST) Sep 13
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
07:24 PM (IST) Sep 13
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன
07:07 PM (IST) Sep 13
தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை செல்லவுள்ளார்
07:06 PM (IST) Sep 13
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து புகழ் பெற்ற சாரா அர்ஜுன் இந்தியாவின் பணக்கார குழந்தை நடிகர் ஆவார். அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அதை பார்க்கலாம்.
05:57 PM (IST) Sep 13
இந்த மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும். செப்டம்பர் 15 முதல் 7 மாநிலங்களில் வானிலை மாறும். எனவே மக்கள் வானிலை அறிவிப்பை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
05:36 PM (IST) Sep 13
பிரேசில் நாட்டில் வாழும் ஒருவர் 6 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். இது அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
04:35 PM (IST) Sep 13
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்
04:16 PM (IST) Sep 13
எலான் மஸ்க் தனது முன்னாள் காதலி கிரிம்ஸ் உடன் இணைந்து மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டதை உறுதி படுத்தியுள்ளார்
04:14 PM (IST) Sep 13
குஜராத் மாநிலத்தில் 12 வயது சிறுவன் உள்பட 3 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
04:13 PM (IST) Sep 13
கணவர் மறைந்த பின்னரும் தாலியை கழட்ட மாட்டேன் என்கிற முடிவில் எதிர்நீச்சல் மாரிமுத்துவின் மனைவி தீர்க்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.
03:01 PM (IST) Sep 13
புதிய ரயில் வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது
02:14 PM (IST) Sep 13
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் ஜவான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
02:08 PM (IST) Sep 13
பொது சிவில் சட்டத்துக்கு எதிராக நாகாலாந்து சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
02:08 PM (IST) Sep 13
இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெறவுள்ளது
12:10 PM (IST) Sep 13
நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வந்தாலும் சரி, தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
11:05 AM (IST) Sep 13
நடிகர் அஜித் - நடிகை ஷாலினி போல் நடிகர் அசோக் செல்வன் - நடிகை கீர்த்தி பாண்டியனின் காதலும் ஒரே படத்தில் கைகூடியது பற்றி விரிவாக பார்க்கலாம்.
10:56 AM (IST) Sep 13
மறைந்த முன்னாள் ஜெயலலிதா பாணியில் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் முரணாக செயல்படும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார்.
10:01 AM (IST) Sep 13
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
09:29 AM (IST) Sep 13
நடிகர் அசோக் செல்வன் தன் நீண்ட நாள் காதலியான நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்துள்ள நிலையில், அவர்களது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
08:58 AM (IST) Sep 13
பொங்கல் பண்டியை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் இன்று முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
08:46 AM (IST) Sep 13
லண்டனில் நடிகர் விஜய் பட டிக்கெட் இலவசமாக வழங்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து அதனை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
08:34 AM (IST) Sep 13
சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் தொடர்பாக தீவிர சோதனை நடைபெறுகிறது.
08:31 AM (IST) Sep 13
இனியாவது காவல்துறையை ஆளுங்கட்சியினர் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு முயற்சிக்குமா? என அண்ணாமலை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
07:29 AM (IST) Sep 13
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
07:06 AM (IST) Sep 13
கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரபடுத்த சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
07:06 AM (IST) Sep 13
சென்னையில் 480வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.