அடேங்கப்பா.. 6 பொண்டாட்டி கூட ஜாலியா வாழுறான்.. இப்படியொரு ஆளா.!!
பிரேசில் நாட்டில் வாழும் ஒருவர் 6 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். இது அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த ஆர்தர் என்பவர் தனது ஆறு மனைவிகளுடன் சேர்ந்து படுக்க 20 அடி படுக்கையை கட்ட 80,000 பவுண்டுகள் (ரூ. 80 லட்சம்) செலவிட்டுள்ளார். ஆர்தருக்கு ஒருமுறை 9 மனைவிகள் இருந்தனர். அவர்களில் நான்கு பேர் அவரை விவாகரத்து செய்தனர்.
அவர் சமீபத்தில் 51 வயதான ஒலிண்டா மரியாவை மணந்தார். தற்போது அவருக்கு ஆறு மனைவிகள் உள்ளனர். இவர் 20 அடிக்கு 7 அடி படுக்கைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அவர் 15 மாதங்களில் இதை செய்துள்ளார்.
இவரின் ஆறு மனைவிகள் வால்குரியா சாண்டோஸ், டாமியானா, அமந்தா அல்புகெர்கி, ஒலிண்டா மரியா, லுவானா கசாகி மற்றும் எமெல்லி சோசா ஆவார்கள். ஆர்தர் மற்றும் லியானா கத்தோலிக்க தேவாலயத்தில் மற்ற பெண்களுடன் தங்கள் உறவை முறைப்படுத்தினர்.
இருப்பினும் அது சட்டப்பூர்வமாக கூறப்படவில்லை. ஏனெனில் பலதார மணம் அவரது நாட்டில் சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு மனைவி கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. இந்த நிலையில் ஒருவர் 6 மனைவியுடன் வாழ்ந்து வருவது பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனக்கு சாக்லேட் வேணும்.. ரசிகரிடம் க்யூட்டாக சண்டை போட்ட தோனி.. என்ன மனுஷன்யா.!