தாலியை கழட்டவே மாட்டேன்... எதிர்நீச்சல் மாரிமுத்துவின் மனைவி எடுத்த அதிரடி முடிவு - பின்னணி என்ன?
கணவர் மறைந்த பின்னரும் தாலியை கழட்ட மாட்டேன் என்கிற முடிவில் எதிர்நீச்சல் மாரிமுத்துவின் மனைவி தீர்க்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.
marimuthu
எதிர்நீச்சல் சீரியல் மூலம் உலகமெங்கும் பேமஸ் ஆனவர் மாரிமுத்து. அவர் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தாலும், அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியலில் அவர் நடித்த ஆதி குணசேகரன் என்கிற கேரக்டருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த சீரியலில் அவர் பேசிய, டயலாக்குகள் எல்லாம் மீம் டெம்பிளேட்டுகளாக மாறும் அளவுக்கு பேமஸ் ஆகின. குறிப்பாக இந்தாம்மா ஏய் என்கிற டயலாக் வேறலெவலில் ரீச் ஆனது.
ethirneechal Marimuthu
இப்படி எதிர்நீச்சல் சீரியலின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற மாரிமுத்துவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருந்தன. அண்மையில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த அவர், பின்னர் கங்குவா, இந்தியன் 2 போன்ற பிரம்மாண்ட படங்களையும் கைவசம் வைத்திருந்தார். இப்படி சினிமா, சின்னத்திரை இரண்டிலும் பிசியாக நடித்து வந்த மாரிமுத்துவு கடந்த ஆகஸ்ட் 8-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
Ethirneechal marimuthu wife
மாரிமுத்துவின் மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரின் மறைவுக்கு சினிமா, சின்னத்திரை என ஏராளமான பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சென்னையில் இருந்து தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட மாரிமுத்துவின் உடல், அங்குள்ள அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. மாரிமுத்துவின் மறைவால் துவண்டு போய் உள்ள அவரது குடும்பத்தினருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஓவர் பிஸி.. பந்தா பண்ணிய வேல ராமமூர்த்தி! குணசேகரன் ரோலுக்கு 2 நடிகர்களுடன் பேச்சு வார்த்தையில் சன் டிவி!
Ethirneechal marimuthu family
நடிகர் மாரிமுத்து உயிரோடு இருக்கும்போதே தன் மனைவியின் மீதுள்ள காதலை பல்வேறு பேட்டிகளில் வெளிப்படுத்தி உள்ளார். தற்போது கணவனை இழந்த பின்னர் மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி ஒரு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். பொதுவாக கணவன் இறந்துவிட்டால் பெண்கள் தாலியை கழட்டி விடுவார்கள். ஆனால் மாரிமுத்துவின் மனைவி தாலியை கடைசிவரை கழட்டவே கூடாது என்கிற முடிவில் இருக்கிறாராம்.
தன் கணவரின் நினைவாக எப்போது தாலியை அணிந்திருக்க போவதாகவும், அது தன்னிடம் இருந்தால் தன் கணவரே தன்னுடன் இருக்கும் ஓர் உணர்வு இருப்பதன் காரணமாக மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். அவரின் இந்த துணிச்சலான முடிவுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... ஒரு வாரம் ஒன்றாக தான் இருந்தோம்.. மாரிமுத்துவிடம் நான் பேசிய கடைசி வார்த்தை... வேல ராமமூர்த்தி உருக்கம்