நார்த் முதல் சவுத் வரை... பாக்ஸ் ஆபிஸில் அடிச்சு நொறுக்கும் ஜவான் - அதுக்குள்ள ஓடிடியில் ரிலீஸா? லீக்கான தகவல்
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் ஜவான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
Shah Rukh khan
கோலிவுட்டில் அறிமுகமாக அடுத்தடுத்து நான்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ. கோலிவுட்டில் கலக்கி வந்த அட்லீக்கு பாலிவுட்டில் கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ஜவான் படம். அப்படம் மூலம் இந்தி திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் அட்லீ. ஷாருக்கானை வைத்து படம் இயக்குவது பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில், அறிமுக படத்திலேயே ஷாருக்கானை வைத்து இயக்கி பாலிவுட்டையே அசர வைத்தார் அட்லீ.
Jawan
ஜவான் பாலிவுட் படமாக இருந்தாலும், அதில் அட்லீ பெரும்பாலும் கோலிவுட் படையையே பயன்படுத்தி இருந்தார். ஷாருக்கான் தவிர அப்படத்தில் பணியாற்றிய பெரும்பாலானோர் கோலிவுட்டை சேர்ந்தவர்கள் தான். நயன்தாரா, யோகிபாபு, விஜய் சேதுபதி என நடிகர்கள் தொடங்கி, அனிருத், ஜி.கே.விஷ்ணு, ரூபன் போன்ற டெக்னீஷியன்கள் வரை ஜவானில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபலங்கள் ஏராளமானோர் பணியாற்றி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... எல்லார் கண்ணும் இவங்க மேலதான்... தங்கச்சியின் திருமணத்தில் தகதகவென மின்னிய ரம்யா பாண்டியன் - வைரல் கிளிக்ஸ்
Shah Rukh khan, Nayanthara
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வந்த ஜவான் திரைப்படம் ஆரம்பத்தில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றாலும், பின்னர் போகப்போக இது பல படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக ஒப்பிட்டு ட்ரோல்களையும் சந்தித்தது. ட்ரோல்கள் வந்தாலும் ஜவான் படத்தின் வசூல் வேட்டை குறைந்தபாடில்லை. இப்படம் வெளியான ஆறே நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது.
Jawan OTT release
தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டு வரும் ஜவான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாம். ரூ.250 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை கைப்பற்றி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... ஓவர் பிஸி.. பந்தா பண்ணிய வேல ராமமூர்த்தி! குணசேகரன் ரோலுக்கு 2 நடிகர்களுடன் பேச்சு வார்த்தையில் சன் டிவி!