அதிசயம் நடந்துருச்சு.. மீண்டும் ஒன்று சேர்ந்த பிக் பாஸ் ஜூலி, ஓவியா - என்னங்க சொல்றீங்க !!
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியும், கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உண்டு. தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள உள்ளார் ஓவியா.
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஓவியா. பல படங்களில் நடித்துள்ள ஓவியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் பங்கேற்ற சக போட்டியாளரான ஆரவை காதலித்தார் ஓவியா. ஆனால் தனக்கு வெளியே காதலி இருப்பதாக கூறி ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார் ஆரவ். பிறகு ஆரவ் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்ள உள்ளார். பிரியங்கா ஆங்கர் ஆக இருக்கும் இந்நிகழ்ச்சியில் ஓவியா மட்டுமல்லாமல், ஜுலி மற்றும் பிற பிக் பாஸ் போட்டியாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
பிக் பாஸ் வீட்டுக்குள் எலியும், பூனையுமாக சண்டை போட்டுகொண்டு, எதிரெதிர் துருவமாக இருந்த ஜூலி மற்றும் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பெரிதாக வெளியே தலைகாட்டவில்லை.
இந்த நிலையில் விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் ப்ரோகிராமில் கலந்து கொள்ளும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இது பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி