ஜெயலலிதா பாணியில் இபிஎஸ்.. சொந்த தொகுதியிலேயே அதிரடி காட்டும் பொதுச்செயலாளர்..!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அதிரடி நடவடிக்கையும், முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகிறார். அதேபோல், கட்சிக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளையும் அதிரடியாக அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி விடுகிறார். 

Dismissal of AIADMK key executives... Edappadi Palanisamy action tvk

மறைந்த முன்னாள் ஜெயலலிதா பாணியில் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் முரணாக செயல்படும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார்.  

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அதிரடி நடவடிக்கையும், முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகிறார். அதேபோல், கட்சிக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகளையும் அதிரடியாக அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி விடுகிறார். 

இதையும் படிங்க;- சைக்கிள் டூ ஜாகுவார் கார் வரை... யார் இந்த தி நகர் சத்யா..? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஏன்?

Dismissal of AIADMK key executives... Edappadi Palanisamy action tvk

அந்த வகையில் சேலம் மாவட்டம் சொந்த தொகுதி எடப்பாடியை சேர்ந்த இரண்டு முக்கிய நிர்வாகிகள் அடிப்படை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- இபிஎஸ்க்கு நெருக்கமான முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. மாவட்ட செயலாளர் வீட்டிலும் ரெய்டு

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த,

M. கந்தசாமி (எடப்பாடி நகர புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் )

K.உத்திரராஜ் (எடப்பாடி நகரக் கழக முன்னாள் துணைச் செயலாளர்) 

ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios