தொடர் கனமழை காரணமாக டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

12:29 AM (IST) Jul 10
கடலூர் அருகே திமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
12:04 AM (IST) Jul 10
சில நாட்களுக்கு பிறகு தலைநகர் சென்னையில் மழை பெய்து வருகிறது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.
10:50 PM (IST) Jul 09
அணுசக்தி கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) கூடங்குளத்தில் இயங்கும் அணு உலையில் வேலை செய்ய அருமையான வாய்ப்பு வெளியாகி உள்ளது.
10:19 PM (IST) Jul 09
தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, 53 எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிர சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் திருப்பத்தை உண்டாக்கி உள்ளது.
09:47 PM (IST) Jul 09
வாட்ஸ்அப் நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த முக்கிய அப்டேட் குறித்த செய்தி வெளியாகி உள்ளது.
08:37 PM (IST) Jul 09
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு 14 கேள்விகளை கேட்டுள்ளார்.
08:09 PM (IST) Jul 09
மெட்டாவின் த்ரெட்ஸ் செயலி வேகமாக வளர்ந்து வருகிறது. இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதன் வளர்ச்சி அதிகரித்து உள்ளது.
06:27 PM (IST) Jul 09
ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவித்த பிரியாணி கடைக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
06:15 PM (IST) Jul 09
கர்நாடகாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேகதாது பிரச்சினை குறித்து முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
05:49 PM (IST) Jul 09
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அவற்றை பற்றி முழு விபரங்களை இங்கே காண்போம்.
05:29 PM (IST) Jul 09
சென்னையில் இருந்து கிளம்பிய பேருந்து ஒன்று திருச்சி அருகே விபத்தில் சிக்கியது.
05:06 PM (IST) Jul 09
பிரபல மேட்ரிமோனியல் தளத்தில் சந்தித்த பெண்ணால் புனே தொழில்நுட்பக் கலைஞர் ரூ.91 லட்சத்துக்கு மேல் ஏமாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
03:07 PM (IST) Jul 09
ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநர் தொடர்பாக புகார் தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு 15 பக்க கடிதம் எழுதியுள்ளார்.
02:11 PM (IST) Jul 09
தேனியில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
01:03 PM (IST) Jul 09
பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் பெண் அடிமைத்தனத்தை விரும்புகிறவர்கள் என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
01:03 PM (IST) Jul 09
உங்கள் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் இனி கவலை வேண்டாம்; உடனடியாக புதிய ரேஷன் கார்டை விண்ணபித்து பெற முடியும்
11:46 AM (IST) Jul 09
அரசு மருத்துவமனைக்கு கையுடன் சென்றால் கை இல்லாமல் வருவது தான் இன்றைய நிலை என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்
11:45 AM (IST) Jul 09
புதுச்சேரியில் நடப்பதை வைத்து பார்த்தால் முதலமைச்சர் ரங்கசாமி இன்னும் கொஞ்ச காலம் கூட தள்ள மாட்டார்; அவரது கதையை பாஜக விரைவில் முடித்து விடும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
11:44 AM (IST) Jul 09
சென்னை பெருநகரில் ரவுடிசம் என்கின்ற ஒன்றுக்கு இடமில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு முற்றிலுமாக ஒடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்
09:18 AM (IST) Jul 09
ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களைச் சார்ந்த மகளிர் இந்தத் திட்டத்தின்கீழ் பயன் பெற முடியாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கிறது. மாதத்திற்கு 300 யூனிட் என்பது சர்வ சாதாரணமான ஒன்று. இதை ஒரு நிபந்தனையாக வைப்பது என்பது கேலிக்கூத்தானது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
09:15 AM (IST) Jul 09
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
07:29 AM (IST) Jul 09
அரசு துறை செயலாளர்கள், காவல் அதிகாரிகள் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் இந்த பணியிட மாற்றங்களை அவ்வப்போது தமிழக அரசு மேற்கொள்ளும். அந்த வகையில் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
07:28 AM (IST) Jul 09
பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.