School Leave : தொடர் கனமழை: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - முழு விபரம்
கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பல வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் எனப் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மண் சரிவு, வெள்ளமும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களாகப் பல வட மாநிலங்களில் பெய்யும் கனமழை காரணமாகக் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, புதுடெல்லியில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பதிவாகி இருக்கிறது.
இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை எச்சரிக்கை காரணமாக டெல்லி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
அதேபோல இமாசல பிரதேசத்தில் பெய்து வரும் மழையால், மாண்டியில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்