Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் இருந்து கிளம்பிய பேருந்து.. குளத்தில் விழுந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து கிளம்பிய பேருந்து ஒன்று திருச்சி அருகே விபத்தில் சிக்கியது.

30 passengers escaped as the Chennai bus overturned in the pond
Author
First Published Jul 9, 2023, 5:27 PM IST

நேற்று சென்னையில் இருந்து நேற்று மாலை அரசு விரைவு பேருந்து ஆனது ஓட்டுநர் சௌந்தர், நடத்துனர் சின்னதம்பி மற்றும் 30 பயணிகளுடன் நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. திருச்சி அருகே துவரங்குறிச்சி திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே வெங்கட் நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது சம்பவம் நடைபெற்றது.

30 passengers escaped as the Chennai bus overturned in the pond

பேருந்தின் முன் பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக சென்று சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு மறுபக்க சாலை மற்றும் சர்வீஸ் சாலையை கடந்து ரோட்டோரத்தில் இருந்த பூசாரி குளத்தில் கவிழ்ந்தது.

30 passengers escaped as the Chennai bus overturned in the pond

அந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார் வந்து பஸ்சை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகள் எந்தவித ஆபத்துமின்றி தப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நடிகர் விஜய்க்கு பேச்சு மட்டும் போதாது.. நடிகர் விஜய்க்கு அட்வைஸ் செய்த அன்புமணி ராமதாஸ் !

Follow Us:
Download App:
  • android
  • ios