Asianet News TamilAsianet News Tamil

அரசு மருத்துவமனைக்கு கையுடன் சென்றால் கை இல்லாமல் வருகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி விளாசல்!

அரசு மருத்துவமனைக்கு கையுடன் சென்றால் கை இல்லாமல் வருவது தான் இன்றைய நிலை என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்

Edappadi palanisamy offer prayer at tiruchendur murugan temple and criticized tn govt on various issues
Author
First Published Jul 9, 2023, 10:46 AM IST

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய திருச்செந்தூர் வருகை தந்தார். இன்று காலை 10.30 மணியளவில் கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள செல்லக்கனி விருந்தினர் மாளிகைக்கு வருகை புரிந்தார்.  பின்னர் அங்கிருந்து பேட்டரி கார்மூலம் கோயிலுக்கு சென்ற அவருக்கு, கோயில் குருக்கள் கும்ப மரியாதை அளித்தனர்.

அதன்பின்னர் அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், கடம்பூர்ராஜூ, சண்முகநாதன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் அவரை செல்லக்கனி விருந்தினர் மாளிகையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். கோயிலில் திரளான பக்தர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மாவின் ஆட்சி காலத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தோம். கோவை சரக டிஐஜி விஜயகுமாருக்கு ஆறுமாத காலம் மன அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி மன அழுத்தம் இருக்கும் நபருக்கு ஏன் பணிச்சுமை வழங்கினர் என கேள்வி எழுப்பினார். 

தமிழகத்தில் காவலர் மன அழுத்த பயிற்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, கோவை சரக டிஐஜி  விஜயகுமார் தற்கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ரகுபதி மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. அவர் ஊழல் குறித்து பேச தகுதியும் அருகதையும் இல்லாதவர். நீதிமன்றத்தில் திமுகவால் நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்கள் சரியான வாதம் செய்யாத காரணத்தால், ஊழல் குற்றசாட்டு தொடர்புடைய அமைச்சர்கள், விடுவிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

மகளிர் உரிமை தொகையை யாரும் பெறக்கூடாது என்பதற்காவே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதோ.! ஸ்டாலினை விளாசும் ஓபிஎஸ்

மகளிர் உரிமைத்தொகை என்பது நடைமுறைக்கு வருமா என்பதே சந்தேகமாக உள்ளது; வரட்டும் பார்ப்போம் என்ற எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் டெல்லி சென்றதை பேப்பர், டிவி செய்தி மூலம் தெரிந்து கொண்டேன். எதற்கு சென்றார் என தெரியாது. அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. ஆகஸ்ட் 20ஆம் தேதி பிரமாண்ட மாநாடு நடைபெற இருக்கின்றது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.” என்றார்.

அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. திமுகதான் பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறது. திமுகதான் நடுங்கிபோய் இருக்கின்றது. அதிமுக யாருக்கும் நடுங்கி பயந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐடி ரைடால் திமுக எப்படி பயந்து போனது என்பதை குறித்து டிஆர் பாலுவே விளக்கம் கொடுத்துள்ளார் என உதயநிதி ஸ்டாலின் கருத்து குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

“திமுக கட்சிக்கு கொள்கை கோட்பாடு கிடையாது அவர்கள் ஆட்சிக்கு வர என்னவேண்டுமானலும் செய்வார்கள். மக்களை பற்றி என்றும் கவலைப்படும் கட்சி அதிமுக மட்டும்தான். திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகின்றதோ அப்போதெல்லாம் விலை  உயர்வு 70 சதவீதம் அதிகரிப்பது வழக்கம். தகுதியற்ற ஆட்சியினால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.” என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

அரசு மருத்துவமனையில் தரமற்ற மருத்துவம் நடைபெறுவதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சளிக்கு ஊசி போட போனால் நாய்கடிக்கு ஊசி போடும் அவலம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு கையுடன் சென்றால் கை இல்லாமல் வெளியே வருகிறார்கள். ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் கை இல்லாமல் மருத்துவமனைக்கு சென்றால் கையுடன் திரும்புவார்கள்.” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios