Published : Nov 06, 2023, 07:22 AM ISTUpdated : Nov 06, 2023, 09:43 PM IST

Tamil News Live Updates: சிக்கலில் அமைச்சர் எ.வ.வேலு.. ஐடி ரெய்டில் ரூ.10 கோடி பறிமுதல்?

சுருக்கம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை அடுத்து சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. இதில் ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Tamil News Live Updates: சிக்கலில் அமைச்சர் எ.வ.வேலு.. ஐடி ரெய்டில் ரூ.10 கோடி பறிமுதல்?

09:43 PM (IST) Nov 06

கார்த்தி என்னை விழாவுக்கு அழைக்கவில்லை.. சூர்யாவிடம் இருந்து ஒதுங்கிவிட்டேன் - அமீர் கொடுத்த ஷாக்..

நான் கொஞ்சம் கோபக்காரனும் சுயமரியாதைக்காரனும்கூட. அதனால்தான் சூர்யாவிடமிருந்து நான் ஒதுங்கிவிட்டேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு யாரும் என்னை அழைக்கவில்லை. நானும் போகவில்லை என்று இயக்குனர் அமீர் பேசியுள்ளார்.

08:23 PM (IST) Nov 06

இறந்த பிறகு மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை எவ்வாறு மாற்றுவது? நாமினி விதிகள் குறித்த முழு விபரம் இதோ !!

இறந்த பிறகு மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை எவ்வாறு மாற்றுவது, நாமினி தொடர்பான விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

07:44 PM (IST) Nov 06

ஜனநாயகம் பற்றி பேசும் ராகுல்காந்தி இதை பேச முடியுமா.? திமுகவை வெளுத்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திமுகவின் ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

06:34 PM (IST) Nov 06

ரஜினியின் ஜெயிலரிடம் மண்ணை கவ்விய விஜயின் லியோ.. வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ திரைப்படம் முறியடிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

05:55 PM (IST) Nov 06

ரூ. 15000க்கு கீழ் உள்ள சிறந்த பட்ஜெட் லேப்டாப்கள் இதுதான்.. முழு லிஸ்ட் இதோ..

குறைந்த விலையில் லேப்டாப்கள் வாங்க வேண்டும் என்பது பலருக்கும் ஆசை. 15000க்கு கீழ் உள்ள சிறந்த மடிக்கணினிகள் மற்றும் அதன் விலை பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

04:25 PM (IST) Nov 06

ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்

04:22 PM (IST) Nov 06

பிக்பாஸ் வீட்டில் இருந்தது ஒரு வாரம் தான்.. ஆனால் சம்பளமோ? அன்ன பாரதி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட அன்ன பாரதியின் சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளது.

03:47 PM (IST) Nov 06

20 நாடுகளின் விசாக்களுக்கு தடை போட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.. இந்தியா லிஸ்ட்-ல இருக்கா? செக் பண்ணுங்க..

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 20 நாடுகளின் விசாக்களுக்கு தடை விதித்துள்ளது. அது எந்தெந்த நாடு என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

02:12 PM (IST) Nov 06

அடுத்த பலி ஆடு இவர்தானா! பிரதீப்பை தொடர்ந்து இன்னொரு போட்டியாளரை ரெட் கார்டு கொடுத்து தூக்க பிளான் போடும் மாயா

பிரதீப்பை பிளான் போட்டு ரெட் கார்டு வாங்கி கொடுத்து வெளியே அனுப்பிய மாயா, பூர்ணிமா தற்போது இன்னொரு ஆண் போட்டியாளரை டார்கெட் செய்துள்ளனர்.

01:35 PM (IST) Nov 06

இலங்கையில் முதல்வர் ஸ்டாலின் வீடியோவுக்கு தடை: அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்!

இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசி அனுப்பிய வீடியோ ஒளிபரப்பாகாதது குறித்து அந்நாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார்.

01:35 PM (IST) Nov 06

போலி வீடியோ: எச்சரிக்கும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

01:28 PM (IST) Nov 06

ஆபாச உடையில் ராஷ்மிகா...? வைரலாக பரவிய வீடியோ! கடும் நடவடிக்கை எடுக்க சொன்ன சூப்பர்ஸ்டார்

நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் உலா வருவது போல் வீடியோ வைரலாகியதை பார்த்து கடுப்பான பிரபல நடிகர் அதிரடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.

12:45 PM (IST) Nov 06

நினைத்தாலே கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்..

வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

12:11 PM (IST) Nov 06

விஸ்வரூபம் சாயலில் கமல்... பாரதியார் கவிதையுடன் பட்டைய கிளப்பும் மணிரத்னத்தின் KH234 பட போஸ்டர் இதோ

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள KH234 படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், தற்போது அதன் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

12:03 PM (IST) Nov 06

அமைச்சர் எ.வ.வேலு ஐடி ரெய்டு: ரூ.10 கோடி பறிமுதல்?

தமிழக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

11:21 AM (IST) Nov 06

தலைமை தகவல் ஆணையராக பதவியேற்ற முதல் தலித் ஹீராலால் சமாரியா? யார் இவர்?

புதிய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

10:32 AM (IST) Nov 06

தேர்வுக்கு சென்ற மாணவிகளின் தாலியை கழற்ற சொன்ன அதிகாரிகள்!

கர்நாடகா சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் தாலியை கழற்றுமாறு அதிகாரிகள் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

10:27 AM (IST) Nov 06

பிளான் பண்ணி ரெட் கார்டு கொடுத்து ஒருத்தன் வாழ்க்கைய அழிச்சிருக்கீங்க! மாயா, பூர்ணிமாவை கிழித்தெடுத்த விசித்ரா

பிக்பாஸ் வீட்டில் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய விவகாரத்தில் மாயா மற்றும் பூர்ணிமாவை விசித்ரா வெளுத்துவாங்கி இருக்கிறார்.

10:17 AM (IST) Nov 06

ரூ.62,000 வரை சம்பளம்.. 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழக வருவாய் துறையில் வேலை.. விவரம் உள்ளே..

நீலகிரி வருவாய் துறையில் காலியாக உள்ள 3 ஓட்டுநர் பணிகள் நிரப்பப்பட உள்ளன.

09:45 AM (IST) Nov 06

கோலிவுட் ரீவைண்டு! தளபதி vs குணா... 1991 தீபாவளிக்கு வந்த கமல், ரஜினியின் மாஸ்டர் பீஸ் படங்கள்... ஆனா ரிசல்ட்?

1991-ம் ஆண்டு தீபாவளிக்கு போட்டி போட்டு திரைக்கு வந்த ரஜினிகாந்தின் தளபதி மற்றும் கமல்ஹாசனின் குணா ஆகிய படங்களைப் பற்றி பார்க்கலாம்.

09:07 AM (IST) Nov 06

அமைச்சர் எ.வ வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக தொடரும் சோதனை.. சிக்கியது என்ன?

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

08:52 AM (IST) Nov 06

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைனு துரத்திய கமலுக்கு ரெட் கார்டை வைத்தே தரமான பதிலடி கொடுத்த பிரதீப் - வைரல் photo

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து தன்னை வெளியேற்றிய கமலுக்கு பிரதீப் ஆண்டனி சூசகமாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.

08:18 AM (IST) Nov 06

சதமடித்த சின்ன வெங்காயம்.. விலை உயர்ந்த கேரட் - கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன?

Vegetable Price Today : தமிழகத்தை பொறுத்தவரை மழைக்காலம் துவங்கி, பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் சின்ன வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை, குறையாமல் முன்னோக்கி சென்றுகொண்டே இருக்கின்றது.

08:02 AM (IST) Nov 06

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் உடல்நலக்குறைவால் நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74.

08:00 AM (IST) Nov 06

சென்னையில் இன்று எந்தெந்த இடங்களில் 5 மணிநேரம் மின்தடை? முழு லிஸ்ட் இதோ!

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று எந்தெந்த இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

07:48 AM (IST) Nov 06

"வேலையில் ஸ்ட்ரிக்ட்.. அவர் ஒரு இரும்பு பெண்மணி".. பெங்களூரு அரசு அதிகாரி கொடூர கொலை - சக ஊழியர் சொன்ன தகவல்!

Bengaluru : கர்நாடக அரசில் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் பணியாற்றிய பிரத்திமா கே.எஸ் (45) பெங்களூரு சுப்ரமணியபோராவில் உள்ள தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

07:23 AM (IST) Nov 06

எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் தொடரும் சோதனை

சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.


More Trending News