சதமடித்த சின்ன வெங்காயம்.. விலை உயர்ந்த கேரட் - கோயம்பேட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன?
Vegetable Price Today : தமிழகத்தை பொறுத்தவரை மழைக்காலம் துவங்கி, பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் சின்ன வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை, குறையாமல் முன்னோக்கி சென்றுகொண்டே இருக்கின்றது.
Small Onion
சதமடித்த சின்ன வெங்காயம்
இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 131 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல பெரிய வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 27 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Beetroot
பீட்ரூட் என்ன விலை தெரியுமா?
அதேபோல பருவ மழை நல்ல முறையில் பெய்து வருவதால் பீட்ரூட் வரத்தும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் பீட்ரூட் ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 34 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 34 ரூபாய்க்கும், சுரக்காய் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
Carrot
விலை உயர்ந்த கேரட்!
நேற்று விற்பனையாகி வந்த விலையை விட இன்று சற்று விலை உயர்ந்து, கேரட் கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் கிலோ 21 ரூபாய்க்கும், அவரைக்காய் கிலோ 47 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் கிலோ 49 ரூபாய்க்கும், சேப்பக்கிழங்கு ஒரு கிலோ 29 ரூபாய்க்கும், மக்காச்சோளம் ஒரு கிலோ 28 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
கத்திரிக்காய் விலை என்ன?
சிறு கத்திரிக்காய் கிலோ 27 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் கிலோ 25 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 149 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் மொத்த வியாபார முறையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.