ரஜினியின் ஜெயிலரிடம் மண்ணை கவ்விய விஜயின் லியோ.. வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ திரைப்படம் முறியடிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
Leo Box Office Collection
கடந்த மாதம் வெளியானது நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி வருகிறது. இந்த படத்தின் வெற்றி விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.
Leo Box Office
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில், கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. விமர்சனத்தில் சறுக்கினாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது லியோ திரைப்படம்.
Vijay
முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய லியோ அதற்க்கு அடுத்த நாட்களில் சற்று பின்தங்கியது. இதுவரை உலக அளவில் ரூ. 570 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை லியோ நிகழ்த்தியுள்ளது.லியோ திரைப்படம் கடந்த 19 அக்டோபர் வெளியானது. இது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
Lokesh Kanagaraj
இந்நிலையில் லியோ திரைப்படம் ரூ. 328.50 கோடியை திரைப்படம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை பாக்ஸ் ஆபிஸ் வசூலின்படி, லியோ திரைப்படத்தின் 3வது வார ஞாயிற்றுகிழமையின் வசூலை, ஜெயிலரோடு ஒப்பிட்டு பார்த்தால், குறைந்த வசூலைதான் லியோ பெற்றுள்ளது. இதே நாளில் ஜெயிலர் திரைப்படம் ரூ.7.9 கோடியை பெற்றது.
Rajinikanth Jailer Collection
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இலங்கையில் ரூ. 20.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால், லியோ திரைப்படம் இதுவரை இலங்கை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 17.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. வரும் காலத்தில் இன்னும் குறையும் என்று கூறப்படுகிறது.