Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் உடல்நலக்குறைவால் நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74.

Pudhucherry Former Speaker Kannan Passed away Political leader mourns Rya
Author
First Published Nov 6, 2023, 8:01 AM IST | Last Updated Nov 6, 2023, 8:00 AM IST

புதுச்சேரி அரவிந்த வீதியை சேர்ந்தவர் கண்னன். இவர் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர், மாநிலங்களவை எம்.பி உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் மூப்பனார் தமிழ்நாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிய போது அந்த கட்சியில் சேர்ந்தார் கண்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவராக இருந்தார்.

இதை தொடர்ந்து புதுச்சேரி மக்கள் காங்கிரஸ், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தொடங்கினார். தனது கட்சி தொண்டர்களால் மக்கள் தலைவர் என்று அழைக்கப்பட்ட கண்ணன், புதுச்சேரி அரசியலில் முக்கிய பங்கு வகித்தர். அவரின் கட்சியில் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்போது புதுச்சேரி அரசியலில் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றன.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் அதிமுகவில் இணைந்த கண்ணன், பின்னர் அந்த கட்சியிலிருந்தும் விலகி பாஜகவில் சேர்ந்தார். ஆனால் சிறிது காலத்திலேயே பாஜகவில் இருந்தும் விலகிய அவர் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த சூழலில் சுவாச கோளாறு, குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை ஆகிய காரணமாக கடந்த 1-ம் தேதி அவர் மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று இருந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்தது. நேற்று மதியம் அவரை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, உள்துறை அமைச்சர் ஆகியோர் மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

நாகா மக்களை இழிவுபடுத்தும் திமுக... ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

இந்த சூழலில் நேற்றிரவு 9.51 மணிக்கு கண்னன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரின் மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios