கார்த்தி என்னை விழாவுக்கு அழைக்கவில்லை.. சூர்யாவிடம் இருந்து ஒதுங்கிவிட்டேன் - அமீர் கொடுத்த ஷாக்..
நான் கொஞ்சம் கோபக்காரனும் சுயமரியாதைக்காரனும்கூட. அதனால்தான் சூர்யாவிடமிருந்து நான் ஒதுங்கிவிட்டேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு யாரும் என்னை அழைக்கவில்லை. நானும் போகவில்லை என்று இயக்குனர் அமீர் பேசியுள்ளார்.
இயக்குநர் அமீர் நடித்துள்ள திரைப்படம் மாயவலை. இதில் ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உட்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை அமீரின் ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் வெளியிடுகிறார்.
இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் பேசிய இயக்குநர் அமீர், “இயக்குனர் வெற்றிமாறனை நடிக்க வைக்கும் ஆசை எனக்கு இருக்கிறது. கதாநாயகனாக, கதையின் நாயகனாக அவரை நடிக்க வைக்க இருக்கிறேன். அவரிடம் அவ்வளவு விஷயம் இருக்கிறது. வட சென்னையில் வெற்றிமாறன் என்னை நடிக்க வைத்தார். படப்பிடிப்பின் முதல் மூன்று நாட்கள் எனக்கு ஒரு மாதிரியாக இருந்து.
அந்த கேரக்டர் சரியாக இருக்கிறதா? என்று அப்போதும் வெற்றி மாறனிடம் கேட்டேன். அவர் ‘ரொம்ப சரியா இருக்கு’ என்று சொன்னார். அதே போல வெற்றிமாறனை நடிக்க வைக்க ஆசை இருக்கிறது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமீர், “ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கே பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
அதனால் எனக்கு வெற்றிமாறனோ இல்லை வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவதில் ஆச்சரியமும் இல்லை புதிதும் இல்லை. நான் கொஞ்சம் கோபக்காரனும் சுயமரியாதைக்காரனும்கூட. அதனால்தான் சூர்யாவிடமிருந்து நான் ஒதுங்கிவிட்டேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு யாரும் என்னை அழைக்கவில்லை. நானும் போகவில்லை” என்றும் சர்ச்சைக்கு விளக்கமளித்தார் அமீர்.
பிறகு பேசிய வெற்றிமாறன், “என்னிடம் பல இயக்குநர்கள் நடிக்க கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் மறுப்பு தெரிவித்து இருக்கிறேன். நடிப்பு, இயக்கம் இரண்டும் வெவ்வேறு துறை. இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பண்ணும் திறன் சிலருக்கு இருக்கலாம். என்னிடம் இல்லை. அதனால் நடிப்பில் ஆர்வமில்லை” என்று கூறினார் இயக்குனர் வெற்றிமாறன்.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா