ரூ. 15000க்கு கீழ் உள்ள சிறந்த பட்ஜெட் லேப்டாப்கள் இதுதான்.. முழு லிஸ்ட் இதோ..
குறைந்த விலையில் லேப்டாப்கள் வாங்க வேண்டும் என்பது பலருக்கும் ஆசை. 15000க்கு கீழ் உள்ள சிறந்த மடிக்கணினிகள் மற்றும் அதன் விலை பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Best Laptops Under 15000
நீங்கள் வேலை செய்பவராக இருந்தாலும், மாணவராக இருந்தாலும் அல்லது பொழுதுபோக்குவராக இருந்தாலும் அனைவருக்கும் லேப்டாப் தேவை. மடிக்கணினியை நம்பியே நம் வேலையைச் செய்து முடிக்கிறோம். ஆனால் நாம் அனைவரும் அதிகம் செலவழிக்க விரும்பவில்லை. 15000க்கு கீழ் உள்ள சிறந்த மடிக்கணினிகள் HP, AXL மற்றும் பல பிராண்டுகளில் கிடைக்கின்றன. அவற்றை பற்றி காண்போம்.
JioBook Laptop
ஜியோபுக் 11 (JioBook) லேப்டாப் மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும் போது எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய சிறந்த மடிக்கணினிகளில் ஒன்றாகக் கருதலாம். மடிக்கணினியை வைஃபை மூலம் எளிதாக இணைக்க முடியும். இந்த மடிக்கணினி 8 மணிநேரம் வரை பேட்டரி திறன் கொண்டது. ஜியோபுக் லேப்டாப் விலை: ரூ 14,499 ஆகும்.
AXL Laptop
AXL Vayubook லேப்டாப் சிறிய மற்றும் கச்சிதமானது ஆகும். இந்த மடிக்கணினி அதிக இடத்தை ஆக்கிரமிக்காமல் உங்கள் பையில் எளிதாக எடுத்து செல்ல முடியும். 14-இன்ச் FHD ஐபிஎஸ் டிஸ்ப்ளே செயல்படும் போது தெளிவான பார்வையை அளிக்கிறது. விண்டோஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இது இயங்குகிறது. இந்த லேப்டாப் 4 ஜிபி ரேம் சேமிப்பு திறன் கொண்டது. AXL லேப்டாப் விலை: ரூ 12,990 ஆகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Walker Laptop
வாக்கர் நோட்புக்/லேப்டாப் முழு எச்டி ஐபிஎஸ் பேனலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன 128 GB SSD உடன் வருகிறது. மொபைல் மற்றும் ஆன்லைன் பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது. WALKER இன் உள்ளமைக்கப்பட்ட 2.0 மெகாபிக்சல் HD கேமராவைக் கொண்டிருப்பதால் நல்ல தரத்துடன் படம் கிடைக்கிறது. வாக்கர் லேப்டாப் விலை: ரூ.14,690 ஆகும்.
HP Laptop
புதுப்பிக்கப்பட்ட HP Chromebook 13 லேப்டாப் வேகமான செயல்திறனுடன், அற்புதமான நீடித்துழைப்பையும் உங்களுக்கு வழங்குகிறது. Intel HD Graphics 515 போன்ற அம்சங்களுடன் வருகிறது. இதில் Chrome OS நிறுவப்பட்டுள்ளது. தெளிவான வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோனுடன் வருகிறது. இதில் கூடுதலாக, புளூடூத் 4.0 சேர்க்கப்பட்டுள்ளது.புதுப்பிக்கப்பட்ட HP லேப்டாப் விலை: ரூ.14,999 ஆகும்.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..