பிக்பாஸ் வீட்டில் இருந்தது ஒரு வாரம் தான்.. ஆனால் சம்பளமோ? அன்ன பாரதி சம்பளம் எவ்வளவு தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட அன்ன பாரதியின் சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளது.
Anna Bharathi
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Bigg Boss Tamil 7
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் 7 வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார்.
bb 7 tamil contestants
அதன் பிறகு பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
bb 7 wild card contestants
அதேபோல பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ மற்றும் அன்ன பாரதி ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களால் வந்துள்ளனர். கடந்த வாரத்தில் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனி அனுப்பப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அன்று பிரபல பேச்சாளர் அன்ன பாரதி வெளியே அனுப்பப்பட்டார்.
Anna Bharathi Salary
இந்த நிலையில் அன்ன பாரதியின் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா