நான் தமிழ்நாடு வருவதும், பேசி வருவதும் சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. வயிற்றில் புளியைக் கரைக்கிறது. காரணம், பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் - பிரதமர் மோடி!!

06:26 PM (IST) Mar 04
இந்தியாவில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் துல்கர் சல்மான், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
06:04 PM (IST) Mar 04
டெல்லி பட்ஜெட் அறிவிப்பில் 18 வயது நிரம்பிய தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
04:58 PM (IST) Mar 04
04:57 PM (IST) Mar 04
கலைஞர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியகம் வருகிற 6ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது
04:22 PM (IST) Mar 04
திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என ஆளுநர் ரவி சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார்
04:12 PM (IST) Mar 04
03:54 PM (IST) Mar 04
ஊழல், உறவினர், சமாதானம் போன்றவற்றில் மூழ்கி இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்போது பதற்றமடைந்து, மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
03:54 PM (IST) Mar 04
நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது
03:22 PM (IST) Mar 04
சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர மோடி.
03:06 PM (IST) Mar 04
தி.மு.க. அரசின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி பொய்ப்பிரச்சாரம் செய்வதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்
02:40 PM (IST) Mar 04
மோடி சுட்ட வடைகள் என கூறி பிரதமர் மோடிக்கு எதிராக திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர்
02:20 PM (IST) Mar 04
02:02 PM (IST) Mar 04
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
01:49 PM (IST) Mar 04
அம்பானி மகன் திருமண விழாவில் அட்லீயை சந்தித்த கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, அவரை கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
01:19 PM (IST) Mar 04
கொடுமைப்படுத்துபவர்கள் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்கமாட்டார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை கடுமையான சாடியுள்ளார்
01:17 PM (IST) Mar 04
நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது உதயநிதி ஸ்டாலின் சனாதன வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
01:09 PM (IST) Mar 04
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த மார்ச் 1-ந் தேதி திரைக்கு வந்த ஜோஸ்வா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ராஹே பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
01:08 PM (IST) Mar 04
அங்கோர் வாட், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய இடங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்களுக்காக ஐஆர்சிடிசி ஒரு சிறந்த டூர் பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது.
12:39 PM (IST) Mar 04
ஓட்டுக்கு நோட்டு வழக்கில் திங்கள்கிழமை (மார்ச் 4) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) பேச்சு வார்த்தைக்காக லஞ்சம் வாங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறியது.
12:28 PM (IST) Mar 04
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி சில நாட்கள் மட்டும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது சைலண்டாகி உள்ளது.
12:21 PM (IST) Mar 04
கோதாவரி இபிஎல்யு ஃபியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பல அம்சங்களுடன் வெளியாகி பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
12:02 PM (IST) Mar 04
இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 9.64 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்
11:56 AM (IST) Mar 04
தபால் நிலையத்தின் இந்தத் திட்டத்தில், நீங்கள் 8 சதவீதத்திற்கு மேல் வட்டி பெறுவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாதமும் வழக்கமான வருமானமும் உங்களுக்கு கிடைக்கும்.
11:31 AM (IST) Mar 04
கூகுள் சிஇஓ பதவியில் இருந்து சுந்தர் பிச்சை விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றது. விரைவில் அவரது பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
11:24 AM (IST) Mar 04
சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
10:40 AM (IST) Mar 04
தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், பிரதமர் மோடியின் உருவப்படத்தை ரத்தத்தால் வரைந்துள்ளார்
10:18 AM (IST) Mar 04
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாரின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது. இதில் ஆர்எஸ்எஸ் சர்கார்யவா தத்தாத்ரேயா ஹோசபாலே, ஆர்எஸ்எஸ் என்ற பெயர் எப்படி வைக்கப்பட்டது என்று கூறினார்.
10:05 AM (IST) Mar 04
தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டு வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளது.
09:17 AM (IST) Mar 04
வெள்ளம் மற்றும் புயல் பாதிப்பின் போது மக்களுக்கு உதவிய ரசிகர்களை நேரில் அழைத்து நடிகர் சூர்யா தடபுடலாக விருந்து வைத்து பாராட்டி உள்ளார்.
08:38 AM (IST) Mar 04
ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் மற்றும் மனைவி உடன் கலந்துகொண்டபோது எடுத்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
07:51 AM (IST) Mar 04
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இன்று சென்னைக்கு வரவுள்ளதன் காரணமாக பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய சாலையில் இன்று பிற்பகலுக்கு மேல் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
07:50 AM (IST) Mar 04
திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் நடத்தும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.
07:50 AM (IST) Mar 04
திமுக வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசுவதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, திமுகவை அழிக்க நினைத்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை திமுகவை தடை செய்வேன் என்று பேசியது தான் எம்ஜிஆருக்கு அது தான் கடைசி பேச்சு என கூறினார்.
07:49 AM (IST) Mar 04
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஶ்ரீபெரும்பத்தூர் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.