ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா.? காங்கிரஸ் கட்சி திடீர் தீர்மானம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஶ்ரீபெரும்பத்தூர் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு தீவிரம்
நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில் பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் தங்களது கூட்டணியை வலுப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீட்டை விட்டுக்கொடுத்து முடித்து வருகிறது. தற்போது வரை மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, பீகார் ஆகிய மாநிலங்களில் தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. மேலும் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஶ்ரீபெரும்பத்தூரை குறி வைக்கும் காங்கிரஸ்
இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்தமுறை கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை தொகுதி மாறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி போட்டியிட ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஶ்ரீபெரும்பத்தூர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
ராகுல் காந்தி போட்டியா.?
இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் ராகுல் காந்தி அல்லது பிரியாங்கா காந்தி போட்டியிட வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை காங்கிரஸ் குறி வைப்பது திமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்