MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திரும்பிய பக்கமெல்லாம் அடிபொலி ரெஸ்பான்ஸ்... தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் புதிய வரலாறு படைத்த மஞ்சும்மல் பாய்ஸ்

திரும்பிய பக்கமெல்லாம் அடிபொலி ரெஸ்பான்ஸ்... தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் புதிய வரலாறு படைத்த மஞ்சும்மல் பாய்ஸ்

தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டு வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 04 2024, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Manjummel Boys

Manjummel Boys

தமிழ்நாட்டில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் மஞ்சும்மல் பாய்ஸ் பற்றிய பேச்சு தான். அந்த அளவுக்கு தமிழகமெங்கும் சக்கைப்போடு போட்டு வருகிறது இப்படம். ஒரு தமிழ்படம் கூட வெற்றி அடையாதா என்கிற ஏக்கத்தில் இருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பட்டைய கிளப்பி வருகிறது. தமிழ்படங்களைக் காட்டிலும் மஞ்சும்மல் பாய்ஸுக்கு தான் அதிகளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

24
Manjummel Boys box office

Manjummel Boys box office

மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு கேரளாவுக்கு நிகராக தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைக்க முக்கிய காரணம் அதன் கதை முழுவதும் தமிழ்நாட்டில் நடப்பது தான். கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு சுற்றுலா வந்திருந்த கேரளாவின் மஞ்சும்மல் பகுதியை சேர்ந்த நண்பர்கள் குழுவில் ஒருவர் மட்டும் எதிர்பாரா விதமாக குணா குகையில் சிக்கிக் கொள்கிறார். அவரை அவரது நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்பது தான் கதை.

இதையும் படியுங்கள்... இது சாதாரணமான படம் போல் தோற்றமளிக்கும் அசாதாரணமான படம்! மஞ்சுமல் பாய்ஸ் படம் குறித்து பிரபலத்தின் பதிவு வைரல்

34
Manjummel Boys Tamilnadu collection

Manjummel Boys Tamilnadu collection

அதுமட்டுமின்றி இப்படத்திற்கு மற்றுமொரு பிளஸ் ஆக அமைந்துள்ளது குணா படத்தின் கனெக்‌ஷன். குணா படத்தில் கமல்ஹாசன் பாடிய கண்மணி அன்போடு காதலன் பாடல் அந்த படத்துக்கு எப்படி ஒரு உயிரோட்டமாக அமைந்திருந்ததோ, அதை மிஞ்சும் அளவுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி இதுவரை காதலர்கள் கொண்டாடிய அப்பாடலை தற்போது நண்பர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மஞ்சும்மல் பாய்ஸ் தான்.

44
Manjummel Boys Record Breaking Collection in Tamilnadu

Manjummel Boys Record Breaking Collection in Tamilnadu

இப்படம் உலகளவில் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இரண்டு வாரங்களை கடந்து வெற்றிநடை போட்டு வரும் இப்படம் உலகளவில் ரூ.90 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை இப்படம் ரூ.15 கோடி வசூலித்து உள்ளதாம். தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மலையாள படம் ஒன்றிற்கு இதுவரை இந்த அளவு வரவேற்பு கிடைத்ததில்லை. 15 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்கிற சாதனையையும் மஞ்சும்மல் பாய்ஸ் நிகழ்த்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... ஒரு செலிபிரிட்டி பன்ற காரியமா இது? படுக்கை அறை வரை சென்ற இன்ஸ்டா பிரபலம் கம்பி எண்ணும் அவலம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved