ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Rameshwaram Cafe explosion case handed over to NIA smp

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள 'ராமேஸ்வரம் கஃபே' உணவகம் பிரபலமானது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடுகின்றனர். இங்கு கடந்த 1ஆம் தேதி பிற்பகலில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.  இதில் உணவகபணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் ப‌டுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து ஒயிட் ஃபீல்ட் போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழ‌க்கு மத்தியகுற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை விசாரிக்கும் என்.ஐ.ஏ.விடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

நாங்களா கொடுமைப்படுத்துறோம்? மாலத்தீவு அதிபரை சாடிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

முன்னதாக, இந்த வழக்கில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஹூப்ளி, தார்வாட், பெங்களூரு ஆகிய இடங்களில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை பிடிக்கும் முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணையானது தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios