மீண்டும் தமிழகம் வரும் மோடி.! உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை- முக்கிய சாலையில் இன்று போக்குவரத்துக்கு தடை

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இன்று சென்னைக்கு வரவுள்ளதன் காரணமாக பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய சாலையில் இன்று பிற்பகலுக்கு மேல் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
 

Security has been beefed up in Chennai ahead of Modi visit to Tamil Nadu KAK

தமிழகம் வரும் மோடி

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களுக்கு சென்ற பிரதமர் மோடி தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். தொடர்ந்து குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து இன்று மீண்டும் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். இன்று மதியம் மதியம் 1.15 மணியளவில் மகாராஷ்டிராவில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி,  2.50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். 

Security has been beefed up in Chennai ahead of Modi visit to Tamil Nadu KAK

தாமரை மாநாட்டில் மோடி

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கல்பாக்கம் சென்று சேர்கிறார். அங்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை மோடி பார்வையிடுகிறார். இதனையடுத்து சென்னை ஒ எம் சி நந்தனத்தில்  பாஜக சார்பாக நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மாலை 5 மணியளவில் கலந்துகொள்ளவுள்ளார். இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சாலைகளில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து இன்று மதியம் முதல் இரவு வரை தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Security has been beefed up in Chennai ahead of Modi visit to Tamil Nadu KAK

போக்குவரத்திற்கு தடை

அண்ணாசாலை, ஒய்எம்சிஏ நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலை பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பிரதமரின் வருகையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றியுள்ள சாலைகளில், குறிப்பாக அண்ணாசாலை, எஸ்வி படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து  நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக சென்னையில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

"தாமரை மாநாடு".. நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. போக்குவரத்தில் மாற்றம் - வெளியான முக்கிய அப்டேட் இதோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios