"தாமரை மாநாடு".. நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. போக்குவரத்தில் மாற்றம் - வெளியான முக்கிய அப்டேட் இதோ!
Thamarai Maanadu PM Modi Visiting Chennai : பிரதமர் மோடி அவர்கள் நாளை சென்னை நந்தனத்தில் நடக்கவுள்ள "தாமரை மாநாடு" பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருவதால் போக்குவரத்தில் மற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு துவங்கிய "என் மண் என் மக்கள்" யாத்திரை கடந்த பிப்ரவரி மாதத்தோடு நிறைவடைந்த நிலையில், அதன் நிறைவு நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்றார். இதற்கான நிகழ்ச்சி பல்லடத்தில் நடந்து முடிந்தது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தமிழகத்தில் வேரூன்ற பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நாளை திங்கட்கிழமை மார்ச் 4ம் தேதி மாலை 5 மணி அளவில் ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நடைபெறுகின்ற "தாமரை மாநாடு" பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சென்னையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி விழா நடைபெறும் இடங்களை சுற்றியுள்ள அண்ணாசாலை, ஒய்எம்சிஏ நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலை பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பிரதமரின் வருகையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றியுள்ள சாலைகளில், குறிப்பாக அண்ணாசாலை, எஸ்வி படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளில் தவிர்த்து மற்ற வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பிற்பகல் 12:00 மணி முதல் இரவு 8 மணி வணிகரக வாகனங்கள் பின்வரும் சாலைகளில் தடை செய்யப்படும்.
மத்திய கைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை, இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை. மௌண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை. அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை. விஜயநகர் சந்திப்பு முதல் காண்கார்ட் சந்திப்பு வரை, அண்ணா சிலை மவுண்ட் ரோடு வரை மற்றும் தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை.
"திமுகவை குறை சொல்வது மட்டுமே அவர் வேலை".. பாஜக தலைவர் அண்ணாமலையை சாடிய அமைச்சர் கீதா ஜீவன்!