"திமுகவை குறை சொல்வது மட்டுமே அவர் வேலை".. பாஜக தலைவர் அண்ணாமலையை சாடிய அமைச்சர் கீதா ஜீவன்!

Minister Geetha Jeevan : தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

Share this Video

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்தை வழங்கினார். பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவை குறை சொல்வதே வேலையா போச்சு, அப்போது தான் அவரை பற்றிய செய்திகள் வரும் அதனால் அப்படி பேசி வருகின்றார் என்றார்.

மத்திய அரசின் திட்டம் எது? மாநில அரசின் திட்டம் எது? என்று தெரியாமல் பேசி வருவதாக தெரிவித்தார். மேலும் தோல்வி பயத்தில் அண்ணாமலை உலறி வருகின்றார்.என்றார் அவர். பேசுவது உண்மையா பொய்யா என்று கூட தெரியாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசி வருகின்றார். எல்லோரும் நம்மை கவனிக்க வேண்டும் என்று எதை எதையோ பேசுகிறார் அண்ணாமலை என்றார் அவர்.

வாயால் வடை சுடுகின்றார் என்றால் அது அண்ணாமலைக்கு தான் பொருத்தமாக இருக்கும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். 

Related Video