க்ரீன் டீ பற்றி தெரியும்! ப்ளூ டீ பற்றி தெரியுமா?

First Published | Mar 10, 2023, 10:09 PM IST

பல்வேறு ஆரோக்கிய நலன்களை வழங்கும் ப்ளூ டீ-யை எப்படி செய்கிறார்கள்? இதனை தினமும் அருந்துவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

காலை எழுந்தவுடன் நாம் அனைவரும் டீயோ அல்லது காபியோ அருந்தும் பழக்கம் கொண்டவர்களே அதனை குடித்து விட்டு அடுத்த வேலையை செய்வோம். காபியில் இன்ஸ்டன்ட் காபி, பில்டர் காபி,கருப்பட்டி காபி, டிகிரி காபி என்று இன்னும் பல விதமான காபிகள் உள்ளன.

அதே போன்று டீ என்று சொல்லப்படும் போது மசாலா டீ ,ஹெர்பல் டீ, லெமன் டீ என்று இன்னும் பல விதங்கள் உள்ளன. அந்த வரிசையில் இன்று நாம் பலரும் விரும்பி குடிக்கும் ப்ளூ டீயை பற்றி தெரிந்து கொள்ள உள்ளோம். இந்த ப்ளூ டீயை எப்படி செய்வது? இதன் பயன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இன்றைய இளைஞர்கள் பலரும் ப்ளூ டீ யை அதிகமாக விரும்புகிறார்கள். இதனை பட்டர் ஃபலய் பீ ஃபலவரில்(Butterfly pee Flower - சங்குப்பூ ) மூலமாக செய்வதால் ஆரோக்கியமான டீ ஆகும் .

இன்றைய டீ பிரியர்கள்பலரும் இந்த ப்ளூ டீக்கு மாறியுள்ளனர் மேலும் இந்த ப்ளூ டீ நீல நிறத்தில் வித்தியாசமான சுவையில் இருப்பதால் இதன் சுவைக்கு பலரும் அடிமை என்றே கூறலாம். அப்படிப்பட்ட இந்த ப்ளூ டீ சுவையை தருவதோடு அல்லாமல் பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் அளிக்கிறது.

பல்வேறு ஆரோக்கிய நலன்களை வழங்கும் ப்ளூ டீ-யை எப்படி செய்கிறார்கள்? இதனை தினமும் அருந்துவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ப்ளூ டீ எப்படி செய்வது:

ஆரோக்கியமான ப்ளூ டீ-யை செய்வதற்கு அடுப்பில் ஒரு பாத்திரம் அதில் 2 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து , பின் அதில் 3 அல்லது 4 சங்கு பூக்கள் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்த பின் அடுப்பில் இருந்து இறக்கி ப்ளூ டீ-யை வடிகட்ட வேண்டும். இப்போது இதில் சிறிது தேன் சேர்த்து சுடச்சுட அருந்தினால் சுவையாக இருக்கும்.

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த ப்ளூ டீ மிகுந்த நன்மையை செய்கிறது அதாவது இந்த ப்ளூ டீ ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு அபாயத்தை வெகுவாக குறைக்கிறது. மேலும் பல ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளையும் பெற்றுள்ளது.

 

கண் ஆரோக்கியதிற்கு சிறந்தது:

ப்ளூ டீயை அருந்துவதால் கண்களின் பார்வை திறன் மேலோங்கும். கண் ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்க துணை புரிந்து மங்கலான பார்வை மற்றும் ஒளி உணர்திறன் உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும் கண்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும் வழிவகுக்கிறது.

Latest Videos


குட்டிஸ்களின் பேவரைட் க்ரிஸ்பி "பலாக்காய் சிப்ஸ் "

நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் :

இந்த ப்ளூ டீ-யை தினமும் குடிப்பதால் உடம்பில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி தொற்றுகளுக்கு எதிராக போராட வேண்டிய சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதோடு அல்லாமல் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பெற்றுள்ளது.மேலும் கேன்சர் செல்கள் வளர விடாமல் தடுக்க ப்ளூ டீ-யி முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

 

பிற பயன்கள்: 
மேலும் ப்ளூ டீயை தினமும் பருகி வர நமது ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். தவிர இந்த டீ-யை அருந்துவதால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட துணை புரிகிறது. அதோடு அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த டீ-யை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் பாதிப்பில் மீண்டு வர துணை புரிகிறது. மேலும் இந்த டீயை அருந்திய அடுத்த சில நிமிடங்களிலேயே ரிலாக்ஸாக இருப்பதை உணர முடியும்.

இப்படி பல்வேறு மருத்துவ குணங்களை அள்ளித்தரும் ப்ளூ டீயை நீங்களும் பருகி ஆரோக்கியமாக வாழுங்கள்!.

click me!