அடிச்சு துவம்சம் செய்யப் போகும் சுக்கிரன் – இந்த 3 ராசியினருக்கு காதல், குடும்ப வாழ்க்கையில் விரிசல் வரும்?

Published : Nov 19, 2024, 11:53 AM ISTUpdated : Nov 19, 2024, 11:54 AM IST

Mercury Retrograde Palan in Tamil : புதன் அஸ்தமிக்கும் முன், சுக்கிரன் தன் ராசியை மாற்றிக்கொண்டிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு பிரச்னைகள் அதிகரிக்கலாம். யார் யாருக்கு என்ன பலன் என்று பார்க்கலாம் வாங்க…

PREV
14
அடிச்சு துவம்சம் செய்யப் போகும் சுக்கிரன் – இந்த 3 ராசியினருக்கு காதல், குடும்ப வாழ்க்கையில் விரிசல் வரும்?
Mercury Retrograde Palan in Tamil

Mercury Retrograde Palan in Tamil : வேத ஜோதிடத்தின்படி, புதன் வரும் நவம்பர் 29, 2024 அன்று மாலை 6:16 மணிக்கு அமைகிறது. இது 13 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 12, 2024 அன்று காலை 6:02 மணிக்கு உயரும். அதற்கு முன்னதாக காதல், வசியம், அழகுக்கு பெயர் போன சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றுகிறார். நேற்று காலை 8:08 மணிக்கு பூர்வாஷாட நட்சத்திரத்தில் சுக்கிரன் மாறினார். சுக்கிரனின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தினாலும், சிலருக்கு நன்மையும் கிடைக்கும். எந்தெந்த ராசியினருக்கு நன்மை உண்டாகும் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க….

24
Mercury Transit 2024, Venus Transit 2024

மிதுனம்:

சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மிதுன ராசியினருக்கு பிரச்சனை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு வரும். வயது தொடர்பான பிரச்சனைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். சொந்தமாக மளிகை கடை வைத்திருப்பவர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சண்டை வரலாம்.

34
Horoscope, Zodiac Signs, Purva Ashadha Nakshatra

கன்னி:

புதிதாக எந்த முயற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும். தைரியம், தன்னம்பிக்கை குறையும். கடை வைத்திருப்பவர்களுக்கு வியாபாரத்தில் ஈடுபாடு குறைவதோடு நஷ்டம் ஏற்படும் சூழல் வரலாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை வரலாம். வயதானவர்களுக்கு மூட்டு வலி உண்டாகக் கூடும். காதல் வாழ்க்கையில் விரிசல் ஏற்படக் கூடும்.

44
Purvashadha Nakshatra, Mercury Transit 2024

மகரம்:

மகர ராசியினருக்கு தொழில், வியாபாரத்தில் லாபம் குறையும். நஷ்டம் வராது. மந்தமாக இருப்பது போன்று தெரியும். ஆனால், உங்களுக்கு லாபம் இல்லாமல் போகும். பொறுமையாக இருப்பது அவசியம். அலுவலகத்தில் பதவி உயர்வு தள்ளி போகலாம். மனக் குழப்பம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வரக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories