இந்தியாவில் ஜோதிடம் பலராலும் நம்பப்படுகிற விஷயமாகும். வாஸ்து சாஸ்திரங்கள், ராசி பலன்கள் போலவே லால் கிதாப் என்ற பண்டைய ஜோதிட முறையும் உள்ளது. இந்த ஜோதிட வழிகாட்டுதலை பின்பற்றினால் வாழ்க்கையில் உங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டாகும். இந்த வழிகாட்டுதல்கள் கிரக நிலைகள், நட்சத்திரங்கள் அடிப்படையில் கணிக்கப்பட்டவை என்பதால் உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும். அவை குறித்து இங்கு காணலாம்.
25
Remedies For Money In Tamil
பணம் குவிய!
செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியின் ஆசி இருந்தால் பணப் பிரச்சனைகள் நீங்கும். "ஸ்ரீசூக்தம்" என மகாலட்சுமியை மனதாரப் பாடினால் தேவியின் அருள் கிடைக்கும். மகாலட்சுமி யந்திரத்தையும் பயன்படுத்தலாம். நல்ல பலன்கள் கிடைக்கும்.
உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பசுக்களுக்கு அவ்வப்போது வெல்லம் கொடுங்கள். இதனால் நிதி மேம்படும்.
சுக்கிர பகவானின் ஆசி பெற எறும்புகளுக்கு சர்க்கரை பொங்கல் வைக்கலாம். இது உங்களுக்கு செல்வத்தை ஈர்க்கும் ஆற்றலை வழங்கும்.
வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் நிதி சிக்கல்கல் வரும். வீட்டை சுத்தமாக வைத்திருப்பது செல்வத்தை ஈர்க்கும். வீட்டிலுள்ள நீர் கசிவுகளையும் சரிசெய்யுங்கள். தண்ணீரை வீணாக்குவதால் பொருளாதார சிக்கல் அதிகமாகும்.
செப்பு நாணய மகிமை:
உங்களுடைய பர்ஸில் 3 செப்பு நாணயங்களை வைத்து கொள்ளுங்கள். இதனால் எதிர்பாராத நிதி இழப்புகள் ஏற்படாது.
குபேரனுக்கு நெய் விளக்கு ஏற்றி மனதார வேண்டி கொள்ளுங்கள். பணம் சேர வேண்டுமென்ற கோரிக்கையை குபேரனுக்கு தெரிவித்தது பணத்தை ஈர்க்கும்.
மது அருந்துதல்:
ஒருவர் மது பழக்கம் வைத்திருந்தால் அவர் வீட்டில் பணம் சேராது. அதனால் குடிப்பதை தவிருங்கள். குடிப்பதால் உங்கள் வீட்டின் வெளிச்சம் பலவீனப்படும். இது செல்வம், நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதில் சிக்கலை உண்டு பண்ணுகிறது.
55
Remedies For Money In Tamil
மந்திரங்கள்:
உங்களுக்கு மேலும் மேலும் பணம் சேர வேண்டுமென்றால் ஒரு சிவப்பு துணியில் தங்கம் அல்லது வெள்ளி நாணயத்தையும், அதனுடன் உங்கள் செல்வங்களான நகைகள் அல்லது பணத்தை லாக்கரில் வையுங்கள். சிவப்பு துணியில் தங்கம் அல்லது வெள்ளி நாணயம் வைப்பது பணத்தை ஈர்க்கும்.
நாள்தோறு காலையில் "ஓம் க்ரானி சூர்யாய நமஹ" என்னும் மந்திரத்தை உச்சரித்தால் மிகவும் நல்லது. இதை சொல்லிவிட்டு சூரிய பகவானுக்கு நீர் வழங்குங்கள். இதனால் உங்களிடம் செல்வமும் வெற்றியும் குவியும்.