
Top 6 Lucky Zodiac Signs in December : 2024 ஆம் ஆண்டு இன்னும் 44 நாட்களில் முடிய உள்ளது. இந்த நாட்களில் ஒரு சில கிரகங்கள் சாதமான நிலையில் இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க போகுது. அதில், யாருக்கெல்லாம் நன்மை கிடைக்க போகிறது என்று பார்த்தால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய 6 ராசிகள் நல்ல பலன்களை பெற போகிறது. இந்த 6 ராசியினர் தான் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகிறார்கள். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.
கன்னி:
கன்னி ராசிக்கு குரு, செவ்வாய், சூரியன், சனி ஆகிய கிரகங்கள் நல்ல நிலையில் இருக்காங்க. அதனால உங்களுக்கு இனி கவலை என்பதே கிடையாது. வேலையில் ஜாலியா இருப்பீங்க. பெரிய இடத்துல கல்யாணம் நடக்கும். நிறைவேறாத ஆசைகள் எல்லாம் நிறைவேறும். உங்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குபேரன் அருள் கிடைக்கும். இனி உங்களுக்கு பணத்துக்கு பஞ்சம் வரவே வராது.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்னும் 44 நாட்கள் செவ்வாய், குரு, சனி மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் அடுத்த மாதங்கள் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்க போகிறது. ஒரு மாதம் நிம்மதியான வாழ்க்கையை வாழ போறீங்க. எதிர்பார்த்த நல்ல செய்தி வரும், பதவி உயர்வு, வருமான உயர்வு தேடி வரும். கோர்ட் வழக்கு இருந்தால் சரியாகும். யாருக்கும் கொடுத்துட்டு எப்போ வரும் எப்போ வரும் என்று எதிர்பார்த்துட்டு இருந்த பணம் கைக்கு வரும். மேஷ ராசியினர் வாழ்க்கையில் சந்தோஷம் தாண்டவம் ஆடும். தொழில் வியாபாரத்தில் சூப்பரான முன்னேற்றம் இருக்கும். இனி எல்லோருமே உங்ககிட்ட ஐடியா கேப்பாங்க…
மகரம்:
சனி, குரு, சுக்கிரன், புதன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் சாதமாக இருக்கின்றன. இதுவரையில் உங்களுக்கு நடக்காமல் இருந்த விஷயங்கள் எல்லாமே ஒன்னு ஒன்னா நடக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். ஜாலியா இருப்பீங்க. குடும்பத்துல அமைதி அதிகரிக்கும். வருமானம் கூடும். பேரும், புகழும் கிடைக்கும். அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் அதிகரிக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களான உங்களுக்கு சந்திரன், கேது, சூரியன், புதன், குரு பகவான் ஆகிய கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால், அடுத்த ஒரு மாதம் நீங்கள் தான் கோடீஸ்வரனாக வாழ போறீங்க. ஏனா காசு பணம் உங்கள தேடி வர போகுது. அரசியல் தொடர்பு உங்களுக்கு கிடைக்கும். சொந்தமாக பிஸினஸ் செய்றவங்களுக்கு லாபம் இரண்டு மடங்கு கிடைக்கும். குடும்பத்தில் சூழல் குதூகலமாக இருக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். ஜாலியா சுற்றுலா சென்று வருவீங்க. ஹனிமூன் கூட போகலாம்.
மீனம்:
சுக்கிரன், சூரியன், குரு, புதன், செவ்வாய் பகவான் ஆகிய கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன. இது உங்களுக்கு பண விஷயத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும். கடன் வாங்கும் நிலை வராது. நீங்க தான் மத்தவங்களுக்கு கடன் கொடுப்பீங்க. சிக்கலே வராது. தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கையில் உச்சம் தொடும் மாதம். கோர் கேஸ் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
சனி, குரு, சுக்கிரன், சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் சாதமாக இருக்கின்றன. இனி எல்லாமே நல்லதா நடக்கும். பட்டாசு கொளுத்தாமலே வெட்டிக்கும். அந்தளவுக்கு குஷியா இருக்க போறீங்க. பண விஷயத்துலயும் கஷ்டம் இருக்காது. வேலையிலயும் அடுத்தடுத்த லெவலுக்கு போவீங்க. வருமானமும் கூடும். பிஸினஸிலயும் லாபம் கூடும். தொட்டது துலங்கும். மண்ணு கூட பொன்னாகும் நிலை உருவாகும். சண்டை சச்சரவிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.