Water: இரவில் தூங்குவதற்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

First Published Feb 2, 2023, 5:55 PM IST

தூங்கச் செல்வதற்கு முன்னும் தண்ணீர் குடிக்கலாமா? கூடாதா? என்ற கேள்வியை இதுநாள் வரையிலும் யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால், தூங்குவதற்கு முன்பாக தண்ணீர் குடிக்க கூடாதாம். இது பற்றிய முழுத் தகவலையும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை மூலாதாரங்களில் மிக முக்கியமானது தண்ணீர். தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தான் முறை. உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் பெரிதும் உதவுவதாகவும், ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பதும் மருத்துவர்கள் கூற நாம் கேட்டிருக்கிறோம். நமது உடலின் பெரும்பாலான பகுதி தண்ணீரால் தான் நிரம்பியுள்ளது. இருப்பினும் தூங்கும் போதும், தூங்கச் செல்வதற்கு முன்னும் தண்ணீர் குடிக்கலாமா? கூடாதா? என்ற கேள்வியை இதுநாள் வரையிலும் யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால், தூங்குவதற்கு முன்பாக தண்ணீர் குடிக்க கூடாதாம். இது பற்றிய முழுத் தகவலையும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
 

தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கலாமா?

இரவில் தூங்குவதற்கு முன்பாக தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிப்பது, தூக்க நேரத்தை முற்றிலுமாக பாதிக்கும். ஏனென்றால், இரவெல்லாம் தூக்கத்தில் எழுந்து சிறுநீர் கழிக்க, அடிக்கடி பாத்ரூருமிற்கும் படுக்கையறைக்கும் நடப்பதற்குமே போதும் போதும் என்றாகி விடும். இதனால், துக்கமும் கெடும். இரவு நேரமானது நம்முடைய உடல் தானாகவே ஓய்வு எடுத்துக் கொள்ளும் நேரம். அந்த சமயத்தில், உடல் நம்மைத் தொந்தரவு செய்யாது. சிலர், சிறுநீர்ப் பையில் மீதமிருக்கும் சிறுநீரைக் கூட வெளியேற்றி விட்டுத் தூங்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தூங்குவதற்கு முன்னதாக சிறுநீர் கழிப்பார்கள். அதற்கேற்ப நிம்மதியான தூக்கத்திற்கு நம்மை 7 முதல் 8 மணி நேரம் வரை சிறுநீர்ப் பையும் நம்மைத் தொந்தரவு செய்யாது. 

இரவில் தண்ணீர் குடிப்பதன் விளைவுகள்

நாம் அதிகமான அளவில் தண்ணீர் குடித்து விட்டு தூங்கினால், இரவெல்லாம் நடந்துகொண்டே இருக்க வேண்டிய சூழல் உண்டாகும். இப்படி இரவில் தூக்கம் பாதிக்கப்பட்டால், உடலில் எந்தப் பழுது நீக்க வேலைகளும் நடைபெறாது. உடல் களைப்பு, கண் எரிச்சல், கவனக் குறைவு, பகலில் தூங்கி வழிதல் மற்றும் பசியின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

குழந்தைகளுக்கு சத்தான கீரை காரப் பொங்கல் இப்படி செய்து கொடுங்கள்!

வெதுவெதுப்பான தண்ணீர்

நீங்கள் இரவில் சாப்பிட்டு முடித்தவுடன் வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், நச்சு நீக்கமும் செய்யும். அடுத்த நாள் காலையில் மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்காது. ஆகவே, இரவில் தாகம் இல்லை என்றால் தண்ணீர் குடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். அப்படியே தண்ணீர் குடிக்க வேண்டுமென்று நினைத்தால், வெதுவெதுப்பான தண்ணீரை தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக குடிப்பது தான் மிகவும் நல்லது.

click me!