Onion Tips : சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

First Published Sep 18, 2022, 10:53 AM IST

உடல்நலனைப் பாதுகாக்க நினைப்பவர்கள், நம் கண் முன்னே இருக்கும் சில காய்கறிகள் மற்றும் தானிய வகைகளை முறையாகப் பயன்படுத்தினாலே போதும். அதில் முக்கியமாக, சாம்பாரில் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயத்தின் பயன்கள் அளப்பரியது. சின்ன வெங்காயம் இரத்ததில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது. இதனை தேனில் ஊற வைத்து உண்ணும் போது, அதன் நன்மைகள் இன்னும் அதிகமாக கிடைக்கும்.
 

செரிமானத்தை தூண்டும்

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது உடலின் மெட்டாபாலிசம் அதிகரித்து, செரிமான மண்டலத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது. மேலும் தேன் மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய இரண்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் செரிமான அமைப்பிற்கு கூடுதல் பலமாக இருக்கும்.

நச்சு நீக்கி

இளங்காலையில் வெறும் வயிற்றில், தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் எளிதில் வெளியேற்றப்படுகிறது.

தூக்கமின்மை குறைபாடு அகலும்

தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுபவர்கள், சின்ன வெங்காயத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடனே அதன் பலனை நீங்களே உணர்வீர்கள்.

Hair Care : சொட்டைத் தலையில் ஆரோக்கியமான தலை முடி வளர அற்புதமான எண்ணெய் இதுதான்!

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி தான் நம் உடலுக்கு எவ்வித நோயும் வராமல் தற்காத்துக் கொள்ள உதவுகிறது. ஆகையால், அதை எப்போதும் பலவீனம் அடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அவ்வகையில், தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பயன்படுகிறது.

நெஞ்சு சளியை போக்க

நெஞ்சு சளியை சேர்ந்து விட்டால், நுரையீரலுக்கு பாதிப்பை உண்டாக்கும். அதை வெளியேற்ற தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் உங்களுக்கு உதவும்.

தொப்பையை குறைக்க

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதிலும் சின்ன வெங்காயம் மிகச் சிறந்தது. அவ்வகையில் தொப்பையை குறைப்பதற்கு சின்ன வெங்காயம் மிகவும் உதவியாக இருக்கும்.

வாரத்திற்கு ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து பாருங்க: அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

தேனில் ஊற வைக்கும் முறை

சின்ன வெங்காயங்களை தோல் உறித்து, அதனை ஒரு டப்பாவில் போட்டு மூழ்கும் அளவிற்கு தேன் ஊற்றி இரு நாட்கள் அப்படியே வைக்கவும். பின் அதை தேனுடன் ஒரு ஸ்பூன் எடுத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.

click me!