மாத்திரை அட்டையில் உள்ள சிவப்பு நிற கோடு எதை குறிக்கிறது என்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பொதுவாக மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்துகளை உட்கொண்டால் அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படும் என்று நமக்கு தெரியும். நாம் மாத்திரை வாங்கும் போது அதில் இருக்கும் குறியீடுகள், லேபிள்களை கவனிப்பதில்லை. அந்த வகையில் மாத்திரை அட்டையில் சிவப்பு கோடு இருப்பதை நம்மில் பலரும் கவனிக்க மறந்துவிடுகிறோம்.
இருப்பினும், இந்த சிவப்பு நிற கோடு எதை குறிக்கிறது என்று சிலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் பலருக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை. இந்த நிலையில் மாத்திரை அட்டையில் உள்ள சிவப்பு நிற கோடு எதை குறிக்கிறது என்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
undefined
மாதவிடாய் சமயங்களில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்கள்!
அதன்படி, "நீங்கள் ஆண்டிபயாடிக் எதிர்ப்பைத் தடுக்கலாம்! மருந்துகளின் துண்டுகளில் ஒரு சிவப்பு கோடு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்தை உட்கொள்ளக்கூடாது என்பதைக் குறிக்கிறது," என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவ சீட்டு வழங்கப்பட்டால் மட்டுமே இந்த மருந்துகளை மருந்தகங்களால் வழங்க முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
You can prevent antibiotic resistance!
A RED LINE on the strip of medicines implies that the medicine should not be consumed without a doctor's prescription. pic.twitter.com/zo7SooaiN9
அதாவது மருந்து அட்டையில் சிவப்பு கோடு இருந்தால் அதை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளக்கூடாது எனவே, மருந்தின் காலாவதி தேதியை நீங்கள் சரிபார்க்கும் போது, பாக்கெட்டில் சிவப்புக் கோடு உள்ளதா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுயமாகவோ அல்லது மருந்தகத்தில் உள்ள ஒருவரின் பரிந்துரையின் பேரில் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. குறிப்பாக சிவப்புக் கோடு உள்ள மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன், மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
சில நிமிடங்கள் கோபப்பட்டால் கூட.. இதய பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.. ஆய்வில் பகீர் தகவல்..
முன்னதாக கடந்த 20216-ம் ஆண்டு மத்திய சுகாதார அமைச்சகம் இந்த சிவப்பு கோடு பற்றி மக்களுக்குத் தெரிவித்தது. மேலும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் அத்தகைய மருந்துகளை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.