Beauty Tips : ஒரே வாரத்தில் உங்கள் கண் இமை முடி வளர தூங்கும் முன் 'இத' யூஸ் பண்ணுங்க..!

First Published May 4, 2024, 9:10 PM IST

உங்கள் கண் இமைகள் மிகவும் மெல்லியதாக இருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு குறிப்புகளை பின்பற்றுங்கள். இது தவிர, உங்கள் கண்களைத் தேய்ப்பதை நிறுத்துங்கள். இதனால், உங்கள் கண் இமைகள் உதிர்ந்து விடும்.

தடிமனான கண் இமைகளைப் பெற பலர் இப்போது சிகிச்சைகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் நீங்கள் அவற்றை இயற்கையாகப் பெறலாம் தெரியுமா..? இதற்கு நீங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை முயற்சிக்க வேண்டும். அவை..

ஆமணக்கு எண்ணெய்: கண் இமைகள் தடிமனாவதற்கு ஆமணக்கு எண்ணெய் சிறந்தப தீர்வாகும். ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில், அது தற்செயலாக உங்கள் கண்களில் பட்டால் ஆபத்து.

லாவெண்டர் எண்ணெய்: லாவெண்டர் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவினால் கண் இமை முடி வளரும். இந்த எண்ணெயை பயன்படுத்திய பிறகு 30 நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

கற்றாழை ஜெல்: அடர்த்தியான கண் இமைகளைப் பெற நீங்கள் கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். இதை நீங்கள் பயன்படுத்திய பிறகு, 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். இதற்குப் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

வைட்டமின் ஈ: கண் இமை முடி சிறப்பாக வளர மற்றொரு எண்ணெய் வைட்டமின் ஈ எண்ணெய் ஆகும். இரவில் தூங்கும் முன் கண் இமைகளில் மஸ்காரா பிரஷ் மூலம் பயன்படுத்துங்கள். பிறகு காலை தூங்கி எழுந்ததும் முகத்தைக் கழுவ மறக்காதீர்கள்.

தேங்காய் பால்: கண் இமைகள் தடிமனாவதற்கு பாரம்பரிய வீட்டு வைத்தியங்களில் ஒன்று தான் தேங்காய் பால். இதற்கு நீங்கள் புதிய தேங்காய் பால் பயன்படுத்துங்கள். சுத்தமான காட்டன் பேடை தேங்காய்ப்பாலில் நனைத்து கண்களில் வைத்து, சுமார் 15 நிமிடங்கள் வைத்திருங்கள்.

click me!