சவுக்கு சங்கர் மாலதியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வந்த நிலையில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுவரை மொத்தம் 7 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டார். அவரை மே 31ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வி.எல் சந்தோஷ் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் தனது பினாமி பெயரில் அவர் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. செய்திவாசிப்பாளராக இருந்த மாலதி தற்போது யூ டியூப் சேனலில் பேட்டியெடுத்து வரும் நிலையில் இவர் தான் சவுக்கு சங்கரின் பினாமி சமூக வலைதலங்களில் பலரும் கூறி வருகின்றனர்.
சவுக்கு சங்கர் மாலதியை பினாமியாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் சேர்ப்பதாக சவுக்கு சங்கரின் மனைவி நிலவு மொழி தெரிவித்துள்ளார். அதாவது வெறும் 14,000 ரூபாய் வாடகை வீட்டில் வசித்து வந்த மாலதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தி.நகரில் 3.5 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
மாலதி பெயரில் ரூ.3 கோடி கொடுத்து சவுக்கு சங்கர் வாங்கியதாகவும், அதில் 2 கோடியை கருப்பு பணமாக அவர் மறைத்து வைத்திருப்பதாகவும். அதனால் ரூ.1 கோடிக்கு அந்த வீட்டை வாங்கியதாக கணக்கு காட்டி ஏமாற்றி உள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை முன் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் மாலதியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மாலதியின் கழுத்தில் அவர் நெருக்கமாக கைபோட்டுக் கொண்டு இருக்கிறார், மாலதியும் சவுக்கு சங்கரின் இடுப்பில் கை வைத்து போஸ் கொடுக்கிறார். இந்த போட்டோவை பார்த்த கள்வனின் காதலி என்று பதிவிட்டு வருகின்றனர்.