வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

By Velmurugan s  |  First Published May 18, 2024, 5:06 PM IST

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர், திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


வைகாசி மாத்தில் வரக்கூடிய விசாகம் நட்சத்திரம் என்பது தமிழ் கடவுளான முருகன் அவதரித்த நாளாகக் கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகின்ற 22ம் தேதி வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி, திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பயணிகளை ஏற்றுவதில் போட்டி; வயலுக்குள் சீறிப் பாய்ந்த தனியார் பேருந்து - திருவாரூரில் 20 பேர் காயம்

Tap to resize

Latest Videos

undefined

அதன்படி வருகின்ற 22ம் தேதி காலை 6.40 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது காலை 8.15 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையத்தை அடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (ரயில் எண் 06858) திருச்செந்தூரில் இருந்து காலை 09.15 மணிக்குப் புறப்பட்டு 10.50 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடையும்.

அடுத்ததாக திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு  திருச்செந்தூருக்கு வந்தடையும். மறுமார்க்கம் திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 01.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 03.00 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாத்தான்குளம் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், காஞ்சனவிளை,  குரும்பூர், ஆறுமுகநேரி  காயல்பட்டினம் ஹாலத் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை; தனது கல்வியால் வீட்டிற்கே வெளிச்சம் கொடுத்த அரசுப்பள்ளி மாணவி

இந்த பெட்டியில் ஐந்து பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!