குற்றாலத்தில் திடீர் காட்டாற்று வெள்ளம்; சிறுவன் அடித்து செல்லப்பட்டதால் அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்

By Velmurugan s  |  First Published May 17, 2024, 5:04 PM IST

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தென்காசி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை மற்றும் மிகவும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதில் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அலறடித்துக் கொண்டு ஓடினர். இதில் நெல்லையைச் சேர்ந்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயணியின் மீது ஏறி இறங்கிய பேருந்து; உயிருக்கு போராடியவரை சாலையோரம் போட்டுவிட்டு ஓடிய ஓட்டுநர்

மேலும் யாரேனும் அவருடன் வெள்ளத்தில் சிக்கி உள்ளார்களா என காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சம்பவம் நடைபெற்ற பழைய குற்றாலம் அருவியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரடி ஆய்வு பணியில் மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்களுக்கு உதவியாக உள்ளூர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கில் சுற்றுலா பயணிகள் சிக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!