Crime: அரசு சொகுசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி, அரிவாள்; நெல்லையில் பரபரப்பு

Published : May 15, 2024, 04:17 PM ISTUpdated : May 15, 2024, 04:22 PM IST
Crime: அரசு சொகுசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி, அரிவாள்; நெல்லையில் பரபரப்பு

சுருக்கம்

சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசுப் பேருந்தில் பயணிகள் இருக்கையில் கிடந்த துப்பாக்கி மற்றும் அரிவாளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தமிழ் நாடு அரசின் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து இன்று வந்தது. இந்த பேருந்து பாளையங்கோட்டை எம் ஜி ஆர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைக்கு பேருந்து வந்தது.

இந்த பேருந்தை அங்கு உள்ள ஊழியர் சுரேஷ் சுத்தம் செய்ய சென்றபோது அந்த பேருந்தில் ஒன்பதாவது நம்பர் மேல் படுக்கையில் சுத்தம் செய்ய சென்றார். அப்போது அதில் ஒரு அரிவாளும், துப்பாக்கியும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடது.

குடிகார ஓட்டுநரின் அலட்சியத்தால் பேருந்து நிலையத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த பயணி; பொதுமக்கள் ஆத்திரம்

அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது தொடர்பாக தடயவியல் துறை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் துறையினர் அரிவாள் மற்றும் துப்பாக்கியில் பதிவாகி இருந்த கைரேகையை சோதனை செய்தனர்.

பெண் காவலர்கள் குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் பாதுகாப்போடு திருச்சி அழைத்து வரப்பட்டார்

பின்னர் இதனை பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது கோவில்பட்டியை சேர்ந்த மிதுன் காந்த் என்பவர் இந்த படுக்கையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் விசாரணை நடத்த பாளையங்கோட்டை போலீசார் கோவில்பட்டிக்கு விரைந்துள்ளனர். அரசு பேருந்தில் இருந்து கத்தி, துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்
வெள்ள அபாய எச்சரிக்கை: தத்தளிக்கும் நெல்லை ! அணைகள் கிடுகிடு உயர்வு.. ஆற்றில் இறங்கினால் ஆபத்து! கலெக்டர் வார்னிங்.