திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் சரகத்திற்கு உட்பட்ட மருதகுளத்தைக் சேர்ந்தவர் சங்கரசுப்பு ( வயது 35). இவர் தனது குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சினை காரணமாக மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலம் அந்த புகார் மீது காவலர்கள் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
அரசு மருத்துவர் செய்த இழிவான செயல்; விபரீத முடிவெடுத்த செவிலியர் கவலைக்கிடம் - போலீஸ் அதிரடி
undefined
இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சங்கரசுப்பு, திடீரென தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
உடல் முழுவதும் கருகிய நிலையில் இருந்த சங்கர சுப்புவை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திடீரென ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.