சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்த பைக்; அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து - மதுரையில் பரபரப்பு

மதுரை பாண்டிகோவில் அருகே திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாம்ல இருப்பதற்காக அரசு பேருந்தில் திடீரென பிரேக் பிடித்த நிலையில் அடுத்தடுத்து வந்த இரு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது.

3 bus damaged at road accident in madurai district vel

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிகோவில் ரிங்ரோடு வழியாக செங்கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல் இன்று காலை சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன்பாக அதிவேகமாக சென்ற பைக் திடிரென சாலையின் நடுவே சென்றுள்ளது. பைக் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார்.

பைபாஸ் சாலை என்பதால் அரசு பேருந்து  பிரேக்  பிடித்த அடுத்த நொடியிலயே பின்னால் வந்த சிவகாசி செல்லும் தனியார் பேருந்தும், அதன் பின்னால் வந்த திருச்செந்தூர் செல்லும் அரசு பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் நல்வாய்ப்பாக ஓட்டுனர்களும், பயணிகளும் காயமின்றி தப்பினர். விபத்து ஏற்பட்டபோது பயணிகள் அச்சத்தின் காரணமாக கூச்சலிட்டனர்.  மூன்று பேருந்துகளும் அடுத்தடுத்து மோதியதில் நடுவே சென்ற தனியார் பேருந்து முன் மற்றும் பின் பகுதிகளிலும் பலத்த சேதமடைந்து கண்ணாடிகள் நொறுங்கியது. 

மாய வலையில் விழவைக்கும் இளம் பெண்கள்; பின்னாடியே அரிவாளோடு வரும் ஆண் நண்பர்கள் - விசாரணையில் அதிர்ச்சி

இதனால் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாட்டுத்தாவணி காவல்துறையினர் பேருந்துகள் மோதிய விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரை பைபாஸ் சாலையில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து சென்ற மூன்று பேருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios