வனப்பகுதியில் உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தின் மலையடிவாரப் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக படையடுப்பதால் பொதுமக்கள் அச்சம்.
தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் கேரளா வனப் பகுதிகளை ஒட்டி உள்ள தமிழக வனப்பகுதிகள் ஆகும். இந்த வனப்பகுதிகளில் அச்சன்கோவில் வனப்பகுதிகளில் வசித்துவரும் யானைகள் மற்றும் சபரிமலை பகுதிகளில் வசிக்கும் யானைகளும் இடம்பெயர்ந்து அச்சன்கோவில் வனப்பகுதிக்குள் வந்துள்ளன.
Suicide: தேனியில் பொதுத்தேர்வில் 494 மதிப்பெண் எடுத்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை
மேலும் தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதிகளில் வன விலங்குகளுக்கும், யானைகளுக்கும் குடிநீர், உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த யானைகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் அடிவாரப்பகுதிகளில் உள்ள ஏராளமான தனியார் தோட்டங்களில் வாழை, தென்னை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் நிரம்பி காணப்படுகின்றன.
இதனால் வனப்பகுதிகளில் இருந்து இறங்கிய யானைகள், தனியார் தோட்டங்களுக்குள் உணவு தேடி நடமாடத் தொடங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் பகுதியில் ஏராளமான யானைகள் வந்துள்ளன. இதே போன்று காசிதர்மம் கிராமபகுதிகளிலும் ஏராளமான யானைகள் நடமாடத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் தற்பொழுது மாங்காய் சீசன் காலம் என்பதால் ஏராளமான தனியார் தோட்டங்களில் தற்போது மாங்காய் பறிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
பேட்ஜ் ஓர்க்கா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? கயிறு கட்டி இயக்கப்பட்ட அரசு பேருந்து
உணவு தேடி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரப் பகுதிகளுக்குள் கேரள மாநில வனப்பகுதியில் இருந்து யானைகள் இடம் பெயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மிகவும் கவனமுடன் தங்களது நிலங்களுக்கு சென்று வர வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பட்டாசுக்களை வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.